(எஸ்.என். நிபோஜன்)

இந்தியாவில்  இருந்து  கொண்டுவரப்பட்டதாக  சந்தேகிக்கப்படும் 82  கிலோகிராம்  கேரள கஞ்சா யாழ்ப்பாணம், மருதங்கேணி கடற்கரையில்  வைத்து  பளைப் பொலிசாரால்  இன்று மீடக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த கஞ்சாப்பொதிகளை மீட்கும் போது சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

இந்தியாவில்  இருந்து கடல் வழியாக கேரள கஞ்சா  ஒரு தொகுதி மருதங்கேணி  கடற்பரப்பினூடாக கொண்டுவரப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றோசான் ராஜபக்ச மற்றும் பளைப் பொலிஸ் பரிசோதகர் அடங்கிய குழுவினர்  குறித்த பகுதிக்குச் சென்று மருதன்கேணி கடற் கரையில் இருந்த   82  கிலோக்கிராம்  கேரள கஞ்சாவினை  மீட்டுள்ளனர். இருப்பினும்  சந்தேக நபர்கள் யாரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட வில்லை.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.