யாழ். சுன்னாகம் , தெல்லிப்பளை, அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை பொலிசாரினால் மாவீரர் நாளுக்கு தடைகோரி மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தனர். அது நடைபெற்ற விசாரணைகளை அடுத்து, குறித்த மனுவை மல்லாகம் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த விண்ணப்பத்தின் போது, பொலிஸார் குற்றவியல் சட்டக்கோவையின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் , நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரமும் பொதுமக்களை ஒன்றுதிரட்டுவதற்கு தடை உள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டி இருந்தனர்.
அதேவேளை சாவகச்சேரி மற்றும் கொடிகாம் பொலிஸாரினால் சாவகச்சேரி நீதிமன்றில் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சாவகச்சேரி நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இரு நீதிமன்றிங்களிலும் யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகி , பொலிஸாரின் மனுவுக்கு எதிராக தமது கடுமையான எதிர் வாதங்களை முன்வைத்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM