களுத்துறை நகரில் பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டியதாக கூறப்படும் லொறி சாரதி ஒருவரைக் கைது செய்திருப்பதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.  

பாடசாலைக்கு செல்லும் நான்கு மாணவிகளிடமே மேற்படி நபர் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். 

குறித்த நபர் வைத்திய பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யவிருப்பதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்