கமல்ஹாசனுக்குக் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துக் கொள்வாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில்  அது தொடர்பில் பார்ப்போம்.

பிக் பாஸ் தமிழ் என்பது 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந்து நாட்டால் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதுவரை ஒளிபரப்பான மூன்று பருவங்களையும் பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார்.

இதன்  ஐந்தாவது பருவம் தற்போது  ஒளிபரப்பப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றிற்காக அமெரிக்கா சென்றிருந்த  கமல்ஹாசன் சரியாக கடந்த வார எபிசோடுக்கு அதாவது கடந்த சனிக்கிழமை  சென்னை வந்து விட்டார்.

ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய போதுகூட, 'சிகாகோவில் இருக்கிறாரே, சரி இந்த வாரம் பிக் பாஸ் வர மாட்டார் போல' என சிலர் பேசியதாக என் காதுகளுக்கு வந்தது. அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, 'கடமை தவறியவன்' என்கிற அவப்பெயர் எனக்கு ஒருபோதும் வந்தது கிடையாது. இனியும் வராது என நம்புகிறேன்' எனப் பேசியிருந்தார்.

இந்தச் சூழலில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவிட்டது.

எனவே வரும் வாரம் பிக் பாஸ் எவிக்ஷன் இருக்குமா? கமல் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் ஷூட்டிங் என்னவாகும்? என்கிற ரீதியில் எழுந்துள்ள கேள்விகள் எல்லோருக்கும் எழுந்துள்ளது.  நிகழ்ச்சி தொடர்புடைய சிலர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,

''சேனல்ல இப்ப இதுபத்தின விவாதம் போயிட்டிருக்கு. கமல் சார்கிட்ட கலந்து ஆலோசிச்சுதான் எந்தவொரு முடிவையும் எடுப்பாங்க. எவிக்ஷன் மட்டும் இல்லாம, வழக்கம்போல அந்த ரெண்டு நாட்களும் நடக்கறதை ஒளிபரப்பலாமா அல்லது  கமல் வீட்டில்இருந்தே நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டு ஒளிபரப்புவதானு  இரண்டு கோணத்துல டிஸ்கஸ் பண்ணிட்டிருக்காங்க" என்கின்றனர் இவர்கள்.

மூன்றாவதாக ஒரு திட்டமும் இருக்கிறதாம். அது கமலுக்குப் பதில் தற்காலிகமாக வேறு ஒருவரை தொகுத்து வழங்க வைப்பது என்கிறார்கள். என்ன முடிவாகிறது என விரைவில் தெரிந்துவிடும்.