எது எப்படி இருந்தாலும் மாவீரர் நாளை நினைவேந்துவதை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை மக்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
மேலும், ஓவ்வொருவரும் தங்களின் இறந்த மாவீரர்களை நினைவேந்த வேண்டும். அதனால், இந்த தடையுத்தரவுகளை உடைத்தெறிய வேண்டும்.
நூற்றுக்கணக்கிலோ, ஆயிரக்கணக்கிலோ நாங்கள் திரள்கின்றபோது, கொரோனாவை இவர்கள் காரணம் காட்டினால் இடைவெளிகளைப் பேணி நாங்கள் இதை செய்ய முடியும்.
ஆகவே, இதை வைத்துகொண்டு தடையுத்தரவு பெற முயற்சிப்பது இலங்கை அரசாங்கத்தினுடைய அடக்குமுறையாகவே நாங்கள் இதைப் பார்க்கின்றோம்.
இந்த அடக்குமுறைகள் உடைத்தெறியப்படவேண்டும். அதற்கு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சிகள், பொதுமக்கள், செயற்பாட்டாளர்கள் எல்லோரும் ஒன்றிணையவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM