வெளியேறும் இளைஞர் படை

By Digital Desk 2

22 Nov, 2021 | 09:07 PM
image

சத்ரியன்

நாட்டை விட்டு வெளியேறுதல், வேறு நாடுகளில் புகலிடம் தேடுதல் -இப்போது உலகளாவிய பிரச்சினையாக மாறியிருக்கிறது.

ஆயிரக்கணக்கான சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள், பெலாரஸ்எல்லையைக் கடந்து போலந்துக்குள் நுழைவதற்காக, கடும் குளிருக்கு மத்தியில்காத்திருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தினால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டபிரச்சினையில்  பெலாரஸ் மீது தடைகளை விதிக்கப் போவதாக ஐரோப்பியநாடுகள் மிரட்ட, ரஷ்யாவில் இருந்து தமது நாடு வழியாக செல்லும், எரிவாயு குழாய்களைதுண்டிப்போம் என்று அந்த நாடு எச்சரிக்க, நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கிறது.

ஆபிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் குடியேற்றவாசிகளின்படகுகள், மெடிட்டரேனியன் கடலில் மூழ்குவதும், தத்தளிக்கும் அகதிகள்மீட்கப்படுவதும் வழக்கமாகியிருக்கிறது.

போர், பட்டினி, பொருளாதார நெருக்கடிகளால், நாடுகளை விட்டு வெளியேறி,பாதுகாப்பான புகலிடத்தை தேடுவது, பொருளாதார வாய்ப்புகளை தேடுவது பரவலான பிரச்சினையாகமாறியிருக்கிறது.

போர் நடந்த காலத்தில், வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ் இளைஞர்கள்தப்பியோடுகின்ற நிலை காணப்பட்டது. 

கைதுகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல், படுகொலைகளுக்கு அஞ்சிதப்பியோடிய தமிழர்கள், இன்று ஐரோப்பாவிலும், கனடாவிலும் வலுவானதொரு சமூகமாகஉருவெடுத்திருக்கிறார்கள்.

போருக்குப் பின்னரும் நீடித்த தமிழர்களின் புலம்பெயர்தல், புகலிடவாய்ப்புகள் அருகியதால், தற்போது குறைந்துள்ளன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-21#page-27

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்