சுபத்ரா

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக எடுத்துக் கொண்டுள்ள இராஜாங்கத் திணைக்களம், உலக தமிழர் பேரவையை புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளாகஏற்றுக்கொண்டு பேச்சுக்களை முன்னெடுத்திருக்கிறது”

“அமெரிக்க பயணமும் பேச்சுக்களும்தமிழர் பிரச்சினைக்கானதீர்வுக்கானதாக, இருந்தால், அதுபற்றி ஏனைய தரப்புகளும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு அதுபற்றி தெரியப்படுத்துவதுமுக்கியமானது”

பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மூவர் குழு, இராஜாங்கத் திணைக்களத்தில் முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டிருக்கிறது.

சுமந்திரனுடன்,மூத்த சட்டத்தரணிகள்கனகஈஸ்வரன், நிர்மலா சந்திரகாசன் ஆகியோர் மேற்கொண்டுள்ளஇந்தப் பயணத்தின் அடிப்படைகள் தொடர்பாக இன்னமும் சரியான தெளிவு இல்லை.

இந்தப் பயணம் குறித்து கூட்டமைப்பினால்அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 

இரா.சம்பந்தனோ, கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற வகையில், சுமந்திரனோ ஊடகங்களுடன் இதுபற்றி பெரிதாக பேசவும் இல்லை. பேசுவதற்கு விரும்பவுமில்லை.

பங்காளிக் கட்சிகளுக்குக் கூட இந்தப் பயணத்தின் நோக்கம் தெளிவுபடுத்தப்பட்டிருக்கவில்லை. 

இதனால் இந்தப் பயணம் குறித்து பலத்த சந்தேகங்கள் இருந்து வந்தன.

உண்மையிலேயே அமெரிக்காவின் அதிகாரபூர்வ அழைப்பு உள்ளதா? கனதியான பயணமாக இருக்குமா என்ற கேள்விகள் இருந்தன.

இரகசிய நிகழ்ச்சி நிரல் ஏதும் இருக்கலாம் என்றும் சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. இலங்கை அரசைக் காப்பாற்றவே இந்தப் பயணம் என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-21#page-25

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/