ஹரிகரன்

“சர்வதேச பிரதிநிதித்துவங்களைப்பெறுவதற்கு, போர்க்கால மீறல்களும், அதற்கு பொறுப்புக்கூறாமையும், இலங்கைக்குமுக்கியமான தடையாக இருந்து வருகிறது”

ஐக்கிய நாடுகள் சபையின் துணைஅமைப்புகளில் ஒன்றான சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் 34 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில், இலங்கை தோல்வியடைந்திருக்கிறது.

அண்மைக்காலத்தில் சர்வதேச அரங்கில்இலங்கைக்கு ஏற்பட்டிருக்கின்ற மற்றுமொரு சறுக்கல் இது.

1947ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்சபையில்நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, உருவாக்கப்பட்ட சர்வதேச சட்ட ஆணைக்குழுவே,சர்வதேச சட்டங்களை உருவாக்குகின்ற பொறுப்பை கொண்டிருக்கிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்மற்றும் நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள்தொடர்பான சட்டங்களை இந்த  ஆணைக்குழுவே உருவாக்குகிறது.

ஒரு நாட்டின் சார்பில் நான்கு பேர்இந்தப் பதவிக்குப் போட்டியிட முடியுமாக இருந்தாலும், ஒருவர் மட்டுமே உறுப்பினராகத்தெரிவாக முடியும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை போன்றஅமைப்புகளுக்கு, உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவது போலவே, சர்வதேச சட்டஆணைக்குழுவுக்கும், பிராந்திய அடிப்படையிலேயே உறுப்பினர்கள் எண்ணிக்கைவரையறுக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது.

ஆபிரிக்க நாடுகளில் இருந்து 9பேரும், ஆசிய- பசுபிக் நாடுகளில் இருந்து 8 பேரும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்இருந்து 3 பேரும், இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளில் இருந்து 6பேரும், மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த 8 பேரும், தெரிவுசெய்யப்படுகின்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதேர்தல் நடத்தப்படும் நிலையில், இறுதியாக 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வந்ததற்போதைய உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் நிறைவடைந்திருக்கவேண்டும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-21#page-25

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/