எம்.எஸ்.தீன் 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் சுமார் ஆறு மாதங்கள் சிறையில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய மாகாணங்களிலும் தமது கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து வருகின்றார். 

ஆதரவாளர்களுக்கும் தமது விடுதலைக்காக பிராத்தனை செய்தவர்களுக்கும் நன்றி கூறுவதற்காகவே விஜயம் செய்வதாக தெரிவிக்கப்பட்டாலும் ரிஷாத் பதியுதீனின் மக்கள் சந்திப்பானது அரசியல் நோக்கத்தைக் கொண்டது என்பது சிந்தனைக்குரியதாகும். 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தோல்வி அடைந்தது. 

அத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரிஷாத் பதியுதீன் உட்பட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. 

ஆயினும் அக்கட்சியின் 03 பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் ரிஷாத் பதியுதீனின் தீர்மானங்களுக்கும், கட்சியின் முடிவுக்கு மாற்றமாகவுமே தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

அவர்கள் அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ரிஷாத் பதியுதீன் தனித்த நின்று தமது கட்சியின் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பொறுத்த வரையில் அது பிரமுகர்களின் கட்சி என்றதொரு கணிப்பு அரசியல் ஆய்வாளர்கள் பலரிடம் காணப்படுகிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-21#page-26

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/