சி.அ.யோதிலிங்கம்

போரில் இறந்தோரை நினைவு கூருதல் தொடர்பாக வடக்கு– கிழக்கு ஆயர்கள் மன்றம் விடுத்த அறிக்கை தற்போது பலத்த வாதப்பிரதிவாதங்களை கிழப்பியுள்ளது. 

நவம்பர் 20ஆம் திகதியை ஆயர்கள் மன்றம் போரில் மரித்தோருக்கான நினைவுநாளாக அனுஷ்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. நவம்பர் 21ஆம் திகதியை ஒட்டிய வாரம் மாவீரர் நினைவு வாரமாக இருப்பதனாலேயே இந்த வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

இதற்கான எதிர்வினைகள் இரண்டு தளங்களிலிருந்து எழுந்தன. ஒன்று தமிழ்த்தேசியப்பரப்பிலிருந்து எழுந்தது. மற்றையது இந்துமதவாத சக்திகளிடமிருந்து எழுந்துள்ளது. தமிழ்த்தேசியப் பரப்பிலிருந்து எழுந்த எதிர்வினைகளில் ஒன்று இரண்டைத்தவிர ஏனையவை நாகரீகமான முறையில் வெளிவந்தன எனக்கூறலாம். 

அந்த எதிர்வினைகள் கத்தோலிக்க மதத் தலைவர்களின் இதுவரை கால தேசியப்பங்களிப்பைக் குறிப்பிட்டு ஆயர்களின் அறிக்கையை வாபஸ் பெறுமாறு கோரப்பட்டிருந்தன. 

              இந்துமதவாத சக்திகளிடமிருந்து எழுந்த எதிர்வினைகள் தமிழ்த்தேசிய நிலை நின்று வெளிவந்தன எனக்கூற முடியாது. அதிகளவில் வசை பாடல்களாகவே இருந்தன.  இவற்றில் சில தனிநபர்களின் அறிக்கை கடும் வசைபாடல்களாக இருந்தது. அவ்வாறான தனிநபர்களின் நிகழ்ச்சி நிரல் வேறு என்பதால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. 

ஆனால் பொதுவாக சர்ச்சைகளுக்குள் மாட்டுப்படாத தனிநபர்களும் அரசியல் போராட்டங்கள்  பற்றி  அக்கறைப்படதவர்களும் ஆயர்களுக்கு கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றார்கள். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-21#page-26

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/