கபில்

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறுஇந்தியா வலியுறுத்தி வருகின்ற போதும், அதனை தட்டிக்கழிப்பதையே, இலங்கையில்ஆட்சியில் இருந்த எல்லா அரசுகளும் வழக்கமாக கொண்டிருக்கின்றன.

ஜே.ஆர்.ஜயவர்த்தன இந்த திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்த பின்னர்,அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திய போதும், அவர்அதனைச் செய்யவேயில்லை.

13 ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்த்த ஆர்.பிரேமதாசவும் அதனைச்செய்யவில்லை. இந்தியாவுடன் அவர் கொண்டிருந்த முரண்பாடுகளால் இந்தியாவும் அதனைஅவரிடம் வலியுறுத்த முடியவில்லை.

அதற்குப் பின்னர், ஆட்சிக்கு வந்த டி.பி.விஜேதுங்க மற்றும் சந்திரிகாகுமாரதுங்க ஆட்சிக்காலங்களில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை வலுப்படுத்துமாறுகோருகின்ற சூழல் தமிழர் தரப்பிடம் இருக்கவுமில்லை. அவர்கள் மீது இந்தியா அழுத்தம்கொடுக்கவுமில்லை.

மஹிந்த ராஜபக்ஷ போரில் வெற்றியீட்டிய பின்னர் மீண்டும் 13 ஆவதுதிருத்தச்சட்டமும், மாகாண சபைகளும் தூசி தட்டப்பட்டன. 

அப்போது தொடக்கம், மஹிந்த, மைத்திரி, கோட்டா என்று ஒவ்வொருஜனாதிபதிகளும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தட்டிக் கழித்துவந்திருக்கிறார்கள்.

இப்போது, மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கின்ற நாடகமும்அரங்கேறி வருகிறது.

தற்போதைய அரசாங்கம், புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கானமுயற்சிகளில் ஈடுபட்டுள்ள சூழலில், 13 ஆவது திருத்தச்சட்டமும், மாகாணசபைகளும்இல்லாமல் ஒழிக்கப்பட்டு விடலாம் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான யோசனைகளை முன்வைக்க நியமிக்கப்பட்டநிபுணர் குழுவின் அறிக்கை இன்னமும் வெளியாகவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-21#page-27

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/