'கிராமத்து நாயகன்' சசிகுமார் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு 'அயோத்தி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'அயோத்தி'. 

இதில் கதையின் நாயகனாக நடிகர் சசிகுமார் நடிக்கிறார். இவருடன் நடிகர்கள் புகழ், போஸ் வெங்கட், யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

மாதேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விடயத்தை பற்றி வித்தியாசமான கோணத்தில் உருவாகியிருக்கும் கதைதான் 'அயோத்தி'. 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தின் மறுபக்கத்தை உணர்ச்சிகரமாக காட்சிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. மதுரை, ராமேஸ்வரம் பகுதியில் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது'' என்றார்.

டிரைடன்ட் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் 'அயோத்தி' படத்தின் தலைப்பு இரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால் தொடக்கத்திலேயே பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.