கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'ராஜவம்சம்'.
இப்படக்குழுவினர், படத்தில் நடித்திருக்கும் நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுத்த மகிழ்ச்சியான விடயம் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படம் தயாராகி, அதனை வெளியிடுவதற்கு முன் நடைபெறும் பட விழாக்களில் கதாநாயகிகளும், அதில் நடித்திருக்கும் ஏனைய நடிகைகளும் பங்கு பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது.
இந்நிலையில், செந்தூர் பிலிம் இன்டர்நெஷனல் சார்பில் தயாரிப்பாளர் டி. டி. ராஜா தயாரித்திருக்கும் 'ராஜ வம்சம்' என்ற திரைப்படம் இம்மாதம் 26ஆம் திகதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் படத்தின் நாயகன் சசிகுமார், நாயகி நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் டி.டி. ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பங்குபற்றினர்.
இந்நிகழ்வின் தொடக்கத்தில் நடிகைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நடிகை நிக்கி கல்ராணி, மூத்த நடிகை ரேகா, படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் நடிகை ரஞ்சனா மற்றும் நடிகை தீபா ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இவர்கள் உரையாடிய பிறகு தான் படத்தில் பணியாற்றிய ஏனைய கலைஞர்களும், படத்தின் நாயகனும் பேசினர்.
இதன் மூலம் தமிழ் திரை உலகில் அண்மைக்காலமாக இல்லாத வகையில் புது முயற்சியாக படத்தின் நாயகிக்கும், ஏனைய நடிகைகளுக்கும் இந்நிகழ்வின் போது தங்களது அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள முன்னுரிமையும், முக்கியத்துவமும் இப்படக்குழுவினர் வழங்கினர். இதற்கு திரையுலகினரும், சக கலைஞர்களும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்திருக்கின்றனர்.
இதன் காரணமாக கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் 'ராஜ வம்சம்' படத்திற்கு ரசிகர்கள், ரசிகைகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த படத்தில் நடிகர்கள் சசிகுமார், தம்பி ராமையா, மனோ பாலா, யோகி பாபு, சதீஷ், மூத்த நடிகைகள் சமித்ரா, ரேகா ஆகியோர்களுடன் நடிகை நிக்க கல்ராணி, ரஞ்சனா, தீபா உள்ளிட்ட நாற்பதைந்திற்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM