பூண்டுலோயா நகரில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதுடைய அம்பகஹாவத்த கெதர உதயணி என்ற பெண் சம்பவம் இடத்திலேயே பலியாகியுள்ளார். 

பூண்டுலோயா நகரிலிருந்து நுவரெலியா செல்வதற்கு பஸ்ஸில் ஏற வீதியை கடக்க முயன்ற போது தலவாக்கலையில் இருந்து வந்த முச்சக்கரவண்டியில் மோதியே குறித்த பெண் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பெண்ணின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பூண்டுலோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக பூண்டுலோயா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த பெண் நுவரெலியாவிலுள்ள வங்கியொன்றில் பணிபுரிந்து வருபவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

- சுரேன்