யாழ்ப்பாணம் சரவணை பகுதியில் வீதி சேறாக காணப்படுவதனால் விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

சரவணை - ஊர்காவற்துறை வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் வேளையில், புனரமைப்பு பணிக்காக வீதியில் போடப்பட்ட மண் , மழை காரணமாக சகதியாக மாறியுள்ளது.

இதனால் அப்பகுதியில் பயணிப்பவர்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நடந்து செல்வோர் பெரும் இன்னல்களை எதிர் கொண்டுள்ளனர்.

அதேவேளை வீதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் , சகதிக்குள் சிக்கி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே விரைந்து புனரமைப்பு பணிகளை முடிக்குமாறும், இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துமாறும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.