சட்ட விரோதமாக வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது

By T. Saranya

22 Nov, 2021 | 02:18 PM
image

(எம்.மனோசித்ரா)

சட்ட விரோதமாக மூன்று வாகனங்களை தம்வசம் வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, கடுவலை வீதி, மாலம்பே பிரதேசத்தில் போலியான இலக்க தகடுகளை உடைய வாகனத்துடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய இவ்வாறு சட்ட விரோதமாக வாகனங்களை வைத்திருந்த மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38 மற்றும் 35 வயதுகளையுடைய மாலம்பே மற்றும் போகந்தர பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து ஜனவரி 3 ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக மன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டு , ஒவ்வொருவரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அத்துருகிரிய பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right