(வத்துகாமம் நிருபர்)

பேராதனை கலஹா வீதியில் இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனை கலஹா வீதியில் பல்கலைக்கழகத்திற்குச் சமீபமான ஹிந்தகல பிரதேசத்தில் மணல் லொறி ஒன்றுடன் இம் மாணவன் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விடத்திற்கு அண்மையில் மாணவர் விடுதி ஒன்று உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக மேற்படி மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர் இரத்தினபுரியை சேர்ந்த 23 வயதுடைய சொய்சா என்ற மாணவன் என அறியப்பட்டுள்ளது.