உணவு பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தாத பட்ஜட் - பொருளாதார நிபுணர் கலாநிதி அகிலன் கதிர்காமர்

Published By: Digital Desk 2

22 Nov, 2021 | 12:25 PM
image

நேர்கண்டவர் - ரொபட் அன்டனி 

இதற்கு முன்னர் அரிசி உற்பத்தியில் ஒரு பலமான நிலைமையில் இலங்கை  இருந்தது.  95 வீதம் நாம் இதில் தன்னிறைவடைந்தோம்.   ஆனால் உரப்பிரச்சினை காரணமாக அந்த தன்னிறைவு நிலையும் 65 வீதமாக குறைவடையும் அபாயம் காணப்படுகிறது.  உணவு பாதுகாப்புக்கு  இந்த பட்ஜெட் கவனம் செலுத்தாமை கவலைக்குரிய விடயமாகும். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர், பொருளாதார நிபுணர்  கலாநிதி அகிலன் கதிர்காமர் விசேட செவ்வி.

இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள்  பிரச்சினைகளை நேர்மையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்.  ஆனால் அதற்கான பொருத்தமான தீர்வுகள் பட்ஜட்டில் இல்லை.   சாதாரண மக்களுக்கு தற்போது இருக்கும் பொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம்  போன்றவற்றுக்கும் ஒரு  தீர்வும் இல்லை. விவசாய உற்பத்தி வீழ்ச்சி கண்டால்  பஞ்சம்கூட  ஏற்படலாம்.  

உணவு பாதுகாப்பு குறித்து  இந்த பட்ஜெட் கவனம் செலுத்தாமை கவலைக்குரிய விடயமாகும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர், பொருளாதார நிபுணர்  கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்தார். 

அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் குறித்து வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். செவ்வியினி விபரம் வருமாறு,

 கேள்வி  :  2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் குறித்த உங்கள் மதிப்பீடு எவ்வாறு அமைந்துள்ளது?  

பதில் :  இது  மிக முக்கியமான வரவு செலவுத்திட்டமாக அமையப்போகிறது. காரணம் தற்போது உலக பொருளாதாரம்கூட ஒரு பாரிய நெருக்கடிக்குள் சென்றுகொண்டிருக்கின்றது.  இந்த நிலைமையில் இலங்கையும் பலவிதமான  நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.  

கொரோனா அனர்த்தம் இன்னும் இலங்கையில் தொடர்கிறது.  பொருளாதாரம் நெருக்கடிக்கியுள்ளாகி இருக்கிறது.  உள்ளூர் உற்பத்தி பல சவால்களை சந்தித்து இருக்கிறது. எமது சர்வதேச வர்த்தகம் அதாவது வெளிநாட்டு வர்த்தகத்தில் பாரிய நெருக்கடிகள் உருவாகியிருக்கின்றன. இறக்குமதி கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய ஒரு நிலைமை காணப்படுகிறது. மாணவர்களின் கல்விநிலை நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.  

விவசாயத் துறையிலும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறான பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இந்த வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.  இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் என்னை பொறுத்தவரையில் இந்த முறையே முதல்தடவையாக எமது அரசாங்கம்   நாட்டில் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றது என்ற விடயத்தையே ஏற்றுக்கொண்டிருக்கிறது.  

சுதந்திரத்திற்கு பின்னர் வந்திருக்கின்ற மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் அந்த நெருக்கடிகளை தீர்ப்பதற்கான பொருத்தமான தீர்வுகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இருக்கின்றனவா என்பதே கேள்வியாகவே அமைகிறது.  பல தசாப்தங்களாக எமது பொருளாதார கட்டமைப்பில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நிதியமைச்சர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். 

எமது இறக்குமதி செலவானது ஏற்றுமதி வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமானதாகும்.  அரசாங்கத்தின் வருமானத்தை எடுத்துப்பார்த்தால் அதுவும் மிகக்குறைவாகவே இருக்கின்றது. இந்த பிரச்சினைகளை நிதியமைச்சர் ஏற்றுக் கொண்டிருந்தாலும் அந்த பிரச்சினைகளுக்கு அவர்கள் முன்வைத்திருக்கும் தீர்வுகள்  நெருக்கடிக்கு தீர்வாக அமையாது.  அவற்றில் பலவிதமான குறைபாடுகள் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2021-11-22#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22