பாட­சாலை ஒழுங்கு விதி­மு­றை­க­ளுக்­க­மை­வாக எந்­த­வொரு ஆடை­யையும் அணிந்­து ­கொண்டு பாட­சாலை வளா­கத்­திற்குள் பிர­வே­சிப்­ப­தற்கு பெற்­றோருக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அது தொடர்­பி­லான சுற்­று­நி­ரூபம் விரைவில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

மஹவ கஜபா வித்­தி­யா­ல­யத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பாட­சாலை வளா­கத்­திற்குள் பிர­வே­சிக்கும் பெற்­றோர் அணி­ய­வேண்­டிய ஆடைகள் தொடர்பில் சில பாட­சா­லைகள் வெளி­யிட்­டுள்ள அறி­வித்­த­லினால் வேலைக்குச் செல்லும் பெற்­றோர் இடை­யூ­று­களை எதிர்­கொள்­கின்­றனர். சில பாட­சா­லைகள் தாய்­மார் பாட­சா­லை­க­ளுக்குள் பிர­வே­சிப்­ப­தாயின் சேலை அல்­லது பொருத்­த­மான ஆடைகள் அணி­வ­தனை கட்­டா­ய­மாக்­கி­யுள்­ளனர்.

அந்த அறி­வித்­த­லினால் தலை­நகர் மற்றும் நக­ரங்­களில் தொழில் புரியும் பெண்கள் தமது பிள்­ளை­களை பாட­சா­லைக்குள் அழைத்துச் செல்­ல ­மு­டி­யாது நுழை­வா­யி­லுடன் திரும்­ப­ வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் வேலை நேரத்தில் பாட­சா­லை­களில் நடை­பெறும் கூட்­டங்­களில் கலந்து கொள்­வ­திலும் தாய்­மார் சிக்­கல்­களை எதிர்­கொண்­டுள்­ளனர்.

எனவே குறித்த விதி­முறை தொடர்பில் பெற்­றோர் தொடர்ச்­சி­யாக அதி­ருப்தி தெரி­வித்து வந்­த­துடன் சிலர் தமது உரிமை மீறப்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளனர்.

அது தொடர்பாக பரிசீலனை செய்து பாடசாலை வளாகத்திற்குள் நுழையும் பெற்றோரின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் ஒன்று வெளியிடப்படவுள்ளது என்றார்.