சிகரெட்டுக்களின் விலை 11 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் 15 சதவீதம் வற் வரி சேர்க்கப்பட்டள்ளதால் சிகரெட் ஒன்றிற்கான விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் 35 ரூபாவாக இருந்த சிகரெட் தற்போது 40 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. இவ்விலை மேலும் 11 ரூபாவாக அதிகரிக்ககூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் காலங்களில் 46 ரூபா முதல் 50 ரூபா வரையில் சிகரெட் ஒன்றின் விலை நிர்ணயிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

மேலும் சிகரெட்டின் விலையை 5 ரூபாவால் அதிகரித்து அதற்கு 15 வீத வற் வரியினை சுமத்துவது தொடர்பான யோசனை எதிர்வரும் இரு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன் புகையிலை தீர்வையை அதிகரிக்க அடுத்தவாரம் அமைச்சரவை பத்திரம் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.