கார்வண்ணன்

மாவீரர் நாள் தொடர்பான பரபரப்பு வடக்கு, கிழக்கில் கடந்த வாரமேஆரம்பித்து விட்டது. வழக்கத்தில் அரச படையினரும் பொலிசாரும் தான் இதனை ஆரம்பித்துவைப்பார்கள்.

இராணுவத்தினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும், கெடுபிடிகள்தீவிரமடையும்,  புதிய சோதனைச் சாவடிகள் முளைக்கும்,துயிலுமில்லங்களை அண்டிய பகுதிகளில் கண்காணிப்புகளும், ரோந்து நடவடிக்கைகளும்தீவிரமடையும்.

இவ்வாறான செயற்பாடுகள், மாவீரர் நாள் வரப்போவதற்கு கட்டியம் கூறி நிற்கும்.

இதற்கு அப்பால், கடந்த ஆண்டு நீதிமன்றங்களின் மூலம் , மாவீரர் நாள்நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பொலிசார் தடை உத்தரவுகளை பெற்றிருந்தனர்.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், வடக்கு, கிழக்கில் துயிலுமில்லங்களில்மாவீரர் நாளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும், 2015  ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர்துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டன.

2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து பத்து நாட்களுக்குள் வந்த மாவீரர்நாளுக்கு தடைவிதிக்காத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த ஆண்டில் இருந்து தனதுஇரும்புக்கரத்தைப் பயன்படுத்தி தடுத்து வருகிறார்.

இந்த ஆண்டும், பல்வேறு மாவட்டங்களில் நீதிமன்றங்களின் ஊடாக தடைக்கட்டளைகள் பெறப்பட்டிருக்கின்றன.

பொலிஸ் தரப்பு இந்த ஆரவாரத்தை ஆரம்பிக்க முன்னரே, மாவீரர் நாள்தொடர்பான பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது வடக்கு -கிழக்கு ஆயர் மன்றம்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-21#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/