பட்ஜட்டுக்கு ஆதரவளிக்குமா பங்காளிகள் :நெருக்கடியில் நிதியமைச்சர் பஷில்?

Published By: Digital Desk 2

21 Nov, 2021 | 07:14 PM
image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின்இரண்டாவது  வரவு,செலவுத் திட்டம் நிதி அமைச்சர்பஷில் ராஜபக்ஷவினால் கடந்த 12ஆம் திகதி வெளியிடப்பட்டது.  

அது தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றுவருகின்றது. இந்த விவாதங்களின்போது ஆளும் தரப்பினர் வரவு, செலவுத் திட்டத்தை பாராட்டிவருகின்றனர். அதேநேரம் எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான விமர்சனத்தினை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், ஆளும் கட்சிக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில்நீடித்து வரும் முரண்பாடுகள் காரணமாக வரவு, செலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில்அவை எவ்விதமாக பிரதிபலிக்கும் என்பது பற்றி பலத்த எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பங்காளி கட்சியான தேசிய சுதந்திரமுன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச அரசாங்கம் தொடர்பாக சில முக்கியமான விடயங்களை  தெரிவித்திருந்தார்.  

அதாவது அரசாங்கத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும்கூடஅரசாங்கத்தை வீழ்த்துவதற்கு  துணை போவதில்லைஎன்றும் அரசாங்கத்தை பலப்படுத்துவதாகவும்  தெரிவித்திருந்தார்.  ஆதனையொத்த கருத்தையேபவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் உதய கம்மன்பிலவும் தெரிவித்திருக்கின்றார்.

  அந்த அடிப்படையில் பார்க்கின்றபோது, பங்காளிக்கட்சிகள் வரவு, செலவுத்திட்டத்தில்அரசாங்கத்தின் காலை வாராது விடும் என்று நம்பலாம். 

எனினும், பங்காளிக்கட்சிகள் தமக்குள்மிக இரகசியமாகவும் தொடர்ச்சியாகவும் நடத்தி வருகின்ற சந்திப்புக்களின் போது வரவு, செலவுத்திட்டத்தில்வாக்களிக்காது விட்டால் என்ன என்ற விடயத்தினை தொடர்ச்சியாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-21#page-5

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right