மாணவர்கள் மத்தியில் புதிய உப டெல்டா பிறழ்வு பரவக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் - சன்ன ஜயசுமன

Published By: Digital Desk 4

21 Nov, 2021 | 04:25 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது இனங்காணப்பட்டுள்ள புதிய உப டெல்டா பிறழ்வு பாடசாலைகள் மாணவர்கள் மத்தியில் பரவக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் , மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்வதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்கள் ஆபத்தானவை - சன்ன ஜயசுமன | Virakesari.lk

தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ள பலரும் தொற்று அறிகுறிகள் ஏற்படும் போது அதனை உதாசீனப்படுத்துகின்றனர்.

அவ்வாறு பொறுப்பின்றி செயற்படாமல் அறிகுறிகள் காணப்படுமாயின் அன்டிஜன் பரிசோதனையையாவது மேற்கொள்ளுமாறும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கேட்டுக் கொண்டார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இலங்கையில் உருவான முதலாவது டெல்டா திரிபான உப டெல்டா பிறழ்வு தற்போது இனங்காணப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் கனிசமானளவு குறைவாகும்.

எவ்வாறிருப்பினும் தடுப்பூசியைப் பெற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கு சிறியளவிலான தடிமன் போன்ற நிலைமை மாத்திரமே ஏற்படுகிறது.

இதன் காரணமாக தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ள பலரும் தொற்று அறிகுறிகள் ஏற்படும் போது அதனை உதாசீனப்படுத்துகின்றனர்.

அவ்வாறு பொறுப்பின்றி செயற்படாமல் அறிகுறிகள் காணப்படுமாயின் அன்டிஜன் பரிசோதனையையாவது மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

காரணம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் , அது தீவிர நிலைமைக்கு கொண்டு செல்லாது என்ற போதிலும் , அவர்களிடமிருந்து ஏனையோருக்கு தொற்று பரவினால் அது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

இவ்வாறான நிலையில் தற்போது இனங்காணப்பட்டுள்ள புதிய உப டெல்டா பிறழ்வு பாடசாலைகள் மாணவர்கள் மத்தியில் பரவக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் , மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாரம் மேலும் 19 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளன. இது தவிர டிசம்பர் மாதம் முதல் வாராந்தம் 30 இலட்சம் தடுப்பூசிகளை எமக்கு வழங்குவதாக பைசர் உற்பத்தி நிறுவனம் உறுதியளித்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51