உலகை அச்சுறுத்தும் உணவுப் பொருள் விலையேற்றம்

Published By: Digital Desk 2

21 Nov, 2021 | 04:24 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை 

முடிவேனா, மாட்டேனாஎன்று பூச்சாண்டி காட்டுகிறது, கொரோனா பெருந்தொற்று. தடுப்பூசி ஏற்றி விட்டோம் என்றுநாடுகள் பெருமை பேசுகையில், புதுப்புது அவதாரங்கள் எடுத்து அச்சுறுத்துகிறது. 

இனிமேல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சட்டங்களை இயற்றியும், ஆலோசனைகளை வழங்கியும் அரசுகள் சமாளிக்கப்பார்க்கின்றன. இவற்றுக்கெல்லாம் மத்தியில், உலக மக்களுக்கு இன்னொரு இடியாய் தலையில்இறங்குகிறது, பொருட்களின் விலையேற்றம். 

இதற்குரிய காரணங்களைஆராய்ந்து, நாடுகளை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு ஐக்கிய நாடுகளைச் சார்ந்தது. குறிப்பாக,ஐ.நா.வின் உணவு விவசாய ஸ்தாபனம் இந்த விடயத்தினை கையாள்கின்றது. இவ்வமைப்பு விலையேற்றத்தைப்பற்றிச் சொல்கிறது. எனினும், தீர்வுகள் இல்லாமல் விழிபிதுங்கி நிற்கிறது. 

2020ஆம் ஆண்டின்செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த செப்டெம்பர் மாதம் உலகளாவிய ரீதியில்உணவுப் பொருட்களின் விலை 33சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அவ்வமைப்பு அறிக்கை விடுகிறது.

உணவு விவசாய ஸ்தாபனத்திடம்சிறியதொரு சூத்திரம் இருக்கிறது. மரக்கறி எண்ணெய், இறைச்சி, சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்களில்விலை எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை அவ்வமைப்பு அவதானிக்கும். 

ஒவ்வொரு மாதங்களும்நிகழ்கின்ற மாற்றங்கள் ஒப்பிடப்படும். இது உணவு விலை சுட்டெண் என்றழைக்கப்படுகிறது.இதன் பிரகாரம், கடந்த ஜூலை மாதத்தில் உலகெங்கிலும் பதிவு செய்யப்பட்ட உணவுப் பொருட்களின்சராசரி விலைகளை விடவும், கடந்த மாதம் உணவுப் பொருள் விலை மூன்று சதவீதத்தால் உயர்ந்திருக்கிறது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-21#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right