( எம்.எம்.சில்வெஸ்டர் )
20 பேர் கொண்ட 21 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய அபிவிருத்தி மகளிர் கிரிக்கெட் குழாத்துக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் இருவர் இடம்பெற்றுள்ளமை யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
யாழ். தெள்ளிப்பழை, மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவியான ஷானு பாஸ்கரன், யாழ்.ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவியான மதுரிகா முரளிதாசன் ஆகிய இரண்டு வீராங்கனைகளே மேற்படி இலங்கை அபிவிருத்தியடைந்துவரும் 21 வயதுக்குட்டபட்ட அணியில் இடம்பிடித்த வீராங்கனைகளாவர்.
இதில், ஷானு பாஸ்கரன் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்காகவும் விளையாடியிருந்தமை விசேட அம்சமாகும்.
நாடு தழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 120 வீராங்கனைகள் கொண்ட கிரிக்கெட் பயிற்சி முகாம் அண்மைக் காலங்களில் நடத்தப்பட்டு வந்தது. இந்த பயிற்சி முகாம்களில் சிறந்த ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தியிருந்த வீராங்கனைகள் இந்த குழாத்தில் இடம் பிடித்தனர்.
இவர்கள் இம்மாதம் முதலாம் திகதி முதல் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான 3 மாத கால மேலதிக பயிற்சி பாசறைகளில் பங்கேற்கவுள்ளனர். இந்த 3 மாத காலத்தை நிறைவு செய்தவர்கள் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தால் நடத்தப்படும் மாகாண மற்றும் மாவட்ட கிரிக்கெட் போட்டிகளில் உள்வாங்கப்படுவார்கள் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவிக்கிறது.
குழாம் விபரம்
1.ரந்தி பிரேமரத்ன - புனித சூசையப்பர் கல்லூரி,கேகாலை.
2.சன்சலா வனிகசேகர - நுகவெல மத்திய கல்லூரி, கண்டி.
3.தருஷி ராஜகருணா - நுகவெல மத்திய கல்லூரி, கண்டி.
4.எஸ்.எச்.மஹேஷிகா - புனித சூசையப்பர் கல்லூரி,கேகாலை.
5. நிமேஷா தருணி – மாரப்பொல மகா வித்தியாலயம் ,கேகாலை.
6. நவோத்யா நெத்மினி – வாதுவ மத்திய கல்லூரி,களுத்துறை.
7.இமொக்சா பாஷினி – வாதுவ மத்திய கல்லூரி,களுத்துறை.
8. சாவிந்தி நிமல்ஷா – வாதுவ மத்திய கல்லூரி,களுத்துறை.
9.மனோஹரி நிசன்சலா – வாதுவ மத்திய கல்லூரி,களுத்துறை.
10. சுலேஷா சத்சரணி – தேவபத்திராஜ கல்லூரி, காலி.
11.சேத்தனா விமுக்தி – பெல்வத்த மகா வித்தியாலயம், மொனராகலை.
12. அயேஷா டிலக்சனி - மஸ்பன்ன மகா வித்தியாலயம், பதுளை.
13.லங்கா திலினி – சிங்கள மகா வித்தியாலயம், திருகோணமலை.
14. ஷானு பாஸ்கரன் - மகாஜனக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
15.ஜனனி வீரக்கோன் – ரோயல் கல்லூரி, பொலன்னறுவை.
16.தருஷி சத்சரணி - போரமடுல்ல மத்திய கல்லூரி, நுவரெலியா.
17. எரங்கி திசாநாயக்க - கட்டுபொத்த திஸ்ஸ மத்திய மகா வித்தியாலம், குருணாகல்.
18.மதுரிகா முரளிதாசன் – ஸ்கந்தவரோதயா கல்லூரி, யாழ்ப்பாணம்.
19.துலங்கா திசாநாயக்க – அனுலா வித்தியாலயம், நுகேகொடை.
20. மெத்மா ஹெட்டியாரச்சி - அனுலா வித்தியாலயம், நுகேகொடை.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM