அத்தியாவசியப் பொருட்களின் விலையை வர்த்தமானியால் கட்டுப்படுத்த முடியாது : இருவாத்தில் தீர்வு : லசந்த அழகியவன்ன

Published By: Digital Desk 2

21 Nov, 2021 | 11:57 AM
image

இராஜதுரை ஹஷான்

அத்தியாவசிய பொருட்களின் விலையை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கட்டுப்படுத்த முடியாது.பல்வேறு காரணிகளினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் இரு வார காலத்திற்குள் அப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வு முன்வைக்கப்படும்.

நுகர்வோரை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என கூட்டுறவுச் சேவைகள்,சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.

பேலியகொட மெனிங் மொத்த விற்பனை நிலையத்தில் நேற்றைய தினம் கரட் ஒரு கிலோகிராம் 300 ரூபாவிற்கும்,லீக்ஸ் ஒருகிலோகிராம் 300 ரூபாவிற்கும்,பச்சை மிளகாய் ஒருகிலோகிராம் 200 ரூபாவிற்கும், கறிமிளகாய் ஒருகிலோகிராம் 400 தொடக்கம் 450 ரூபாவிற்கும்,போஞ்சி ஒருகிலோகிராம் 300 ரூபா தொடக்கம் 350 ரூபா வரையிலும்,தக்காளி ஒருகிலோகிராம் 300 ரூபா தொடக்கம் 320 ரூபாவிற்கும்  விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களை காட்டிலும் தற்போது மரகறிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. உர பிரச்சினை காரணமாக மரக்கறி உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளன.

எதிர்வரும் நாட்களிலும் விலை அதிகரிக்கக் கூடும். இவ்வாறான நிலை தொடர்ந்தால் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என மெனிங் பொது விற்பனை நிலையத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளர் அனில் இந்ரஜித் குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறிகளை அதிக விலை கொடுத்து மொத்தமாக பெற்று அதனை இலாபமான முறையில் நுகர்வோருக்கு வழங்க முடியாது ஆகவே மொத்த விலைக்கு அமைவாகவே மரக்கறிகளின் விற்பனை விலையை தீர்மானிக்க முடியும் என மரக்கறி சில்லறை வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

சமையல் எரிவாயு மற்றும் மரக்கறி ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் உணவக உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க ஹோட்டல் மற்றும் சிற்றுண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய கொத்துரொட்டி 20 ரூபா தொடக்கம் 25 ரூபாவிலும்,ஏனைய பனிஸ் வகையிலான உணவு பொருட்களின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24