நெல், சோளம் மற்றும் மரக்கறிகள் உட்பட பல அத்தியாவசிய பயிர்களுக்கு தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

'பெரும் பருவத்தில்' தொடர்ச்சியான மழைப்பொழிவின் பாதகமான விளைவுகளை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு விவசாய இரசாயனங்களை வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக விவசாய அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் ஜயசிங்க தெரிவித்தார். 

விவசாய பணிப்பாளர் நாயகம் மற்றும் கலால் பதிவாளரின் ஆலோசனையின் பேரில் விவசாயிகளுக்கு போதுமான அளவு விவசாய இரசாயனங்கள் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.