(துபாயிலிருந்து நெவில் அன்தனி)
துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி, துபாய் றக்பி மைதானத்தில் சனிக்கிழமை நிறைவுபெற்ற அணிக்கு எழுவர் ஆசிய றக்பி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஹொங் கொங்கும் பெண்கள் பிரிவில் ஜப்பானும் சம்பயினாகின.
இப் போட்டியில் சம்பியனான ஹொங் கொங், ஜப்பான் ஆகிய இரண்டு அணிகளுடன் இரண்டாம் இடங்களைப் பெற்ற தென் கொரியா, சீனா ஆகிய அணிகளும் தென் ஆபிரிக்காவின் கேப்டவுனில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அணிக்கு எழுவர் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தென் கொரியாவை எதிர்த்தாடிய ஹொங் கொங் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி 33 - 7 புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்டு அணிக்கு எழுவர் ஆசிய றக்பி சம்பியனானது.
ஹொங் கொங் சார்பாக கா டோ காடோ லீ (2), ஹியூகோ ஸ்டைல்ஸ், மெக்ஸ் டென்மார்க், மைக்கல் கவர்டேல் ஆகியோர் ட்ரைகளை வைத்தனர். அவற்றில் 4 ட்ரைகளுக்கான மேலதிகப் புள்ளிகளை ரசல் வெப் பெற்றுக்கொடுத்தார்.
ஜப்பான் சார்பாக நாமுக் கிம் வைத்த ட்ரை வைத்ததுடன் அதற்கான மேலதிப் புள்ளிகளை அண்ட்றே ஜின் பெற்றக்கொடுத்தார்.
இப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் சீனாவை 14 - 12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிகொண்ட ஜப்பான் சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது.
ஜப்பான் சார்பாக ஹொனோக்கோ சுட்சுமி, யூமே ஹிரானோ ஆகியோர் ட்ரைகளை வைத்ததுடன் மிச்சாயோ சூடா மேலதிகப் புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார்.
சீனா சார்பாக கெயி சென், மிங்லின் டெங் ஆகியோர் ட்ரைகளை வைத்ததுடன் அவற்றில் ஒரு ட்ரைக்கான மேலதிகப் புள்ளிகளை யிங் ஸாஓ பெற்றுக்கொடுத்தார்.
ஆசிய றக்பி நிறுவனத்தின் தலைவர் காயிஸ் அல் தலாய் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கினார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை றக்பி ஆலோசனைக் குழுத் தலைவரும் ஆசிய றக்பியின் சுயாதீன உறுப்பினருமான அசங்க செனவிரட்ன ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இறுதிப் போட்டிகளைக் கண்டுகளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM