அணிக்கு எழுவர் ஆசிய றக்பியில் இலங்கை அணிகளுக்கு 6 ஆம் இடங்கள்

21 Nov, 2021 | 06:57 AM
image

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி, றக்பி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20) நிறைவுக்கு வந்த ஆசிய அணிக்கு எழுவர் றக்பி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோப்பை பிரிவில் இலங்கை அணிகள் இரண்டாம் இடங்களைப் பெற்றன.

இதற்கு அமைய ஓட்டுமொத்த அணிகள் தரவரிசையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இலங்கை அணிகள் 6 ஆம் இடத்தைப் பெற்றன.

கொவிட் - 19 காரணமாக இலங்கையில் ஒரு வருடத்துக்கு மேல் றக்பி விளையாடப்படாத நிலையில் ஒரு மாதம் மாத்திரமே பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை அணிகள் 6 ஆம் இடங்களைப் பெற்றமை பாராட்டுக்குரியதாகும்.

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் பலம்வாய்ந்த ஐக்கிய அரபு இராச்சித்தை எதிர்த்தாடிய இலங்கை கடும் சவால் விடுத்து விளையாடி 10 - 29 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்தது. இலங்கை சார்பாக இஷார மதுஷான், சுதாரக்க டிக்கும்புர ஆகியோர் ட்ரைகளை வைத்தனர்.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய ஐக்கிய அரபு இராச்சியம் கோப்பை பிரிவில் சம்பியனானது.

முன்னதாக அரை இறுதிப் போட்டியில் பிலிப்பைன்ஸை எதிர்த்தாடிய இலங்கை 28 - 24 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியீட்டியது. 

இலங்கை அணியினர் இடைவேளைக்குப் பின்னர் தவறிழைத்திராவிட்டால் இதனை விட மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கும்.

போட்டி ஆரம்பித்தது முதல் திறமையாக விளையாடிய இலங்கை முதலாவது ஆட்ட நேர பகுதியில் முதல் 5 நிமிடங்களில் 3 ட்ரைகள், 3 கொன்வேர்ஷன்களுடன் 17 புள்ளிகளைப் பெற்றது.

இலங்கை சார்பாக அஞ்சுல ஹெட்டிஆராச்சி (2 நி., 5 நி.), நிஷொன் பெரேரா (3 நி.) ஆகியோர் மிகவும் சாதுரியத்துடன் விளையாடி 3 ட்ரைகளை வைத்தனர். இந்த 3 ட்ரைகளுக்கான மேலதிக புள்ளிகளை இஷார மதுஷன்க பெற்றுக்கொடுத்தார்.

இடைவேளையின்போது இலங்கை 17 - 5 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் இலங்கை தொடர்ச்சியாக தவறுகளை இழைத்ததால் பிலிப்பைன்ஸ் அடுத்தடுத்து 2 ட்ரைகளை வைத்ததுடன் அவற்றுக்கான மேலதிகப் புள்ளிகளையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இலங்கை அணி கடும் முயற்சி எடுத்துக்கொண்டு விளையாடியது. இதன் பலனாக ரவிந்து ஹெட்டிஆராச்சி தனது 3ஆவது ட்ரையை வைத்தார். அதற்கான மேலதிகப் புள்ளிகளைப் நுவன் பெரேரா பெற்றுக்கொடுக்க இலங்கை 28 - 17 என முன்னிலை அடைந்தது.

கடைசிக்  கட்டத்தில் இலங்கை அணியில் மீண்டும் ஒரு வீரர் மஞ்சள் அட்டைக்கு இலக்கானார். அதனையும் தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட பிலிப்பைன்ஸ் அணியினர் ட்ரை வைத்து அதற்கான மேலதிகப் புள்ளிகளைப் பெற்றனர். எனினும் இலங்கை 28 - 26  என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டியது.

பெண்களுக்கான கொப்பைப் பிரிவு இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் பலத்துக்கும் வேகத்துக்கும் ஈடுகொடுக்க முடியாத இலங்கை  45 - 0 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது. இதற்கு அமைய கோப்பை பிரிவில் தாய்லாந்து சம்பியனானது.

முன்னதாக பிலிப்பைன்ஸுக்கு எதிராக நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் அணித் தலைவர் துலானி பல்லேகொந்தகேயின் தனிநபர் ஆற்றலால் இலங்கை 19 - 15 என்று புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

போட்டியின் முதலாவது பகுதியின் 3ஆவது நிமிடத்தில் பந்தைப் பெற்றுக்கொண்ட துலானி சுமார் 30 மீற்றர் தூரம் ஓடி முதலாவது ட்ரையை வைத்தார். அதற்கான மேலதிக புள்ளிகள் பெறப்படவில்லை.

பிலிப்பைன்ஸ் அணி புள்ளிகள் நிலையை சமப்படுத்தியபோதிலும் இலங்கை சார்பாக அனுஷா அத்தநாயக்க இரண்டாவது ட்ரையை வைத்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

போட்டியின் இரண்டாவது பகுதியில் இலங்கை அணியினர் இழைத்த தவறுகளை நன்கு பயன்படுத்திக்கொண்ட பிலிப்பைன்ஸ் அணியினர் அடுத்தடுத்து இரண்டு ட்ரைகளை வைத்து 15 - 12 என முன்னிலை அடைந்தது.

ஆனால், தமது அணிக்கு அனுகூலமாக கிடைத்த பந்துடன் 95 மீற்றர் தூரம் ஓடிய துலானி தனது 2ஆவது ட்ரையை வைத்தார். அதற்கான மேலதிகப் புள்ளிகளை அனுஷிக்க சமரவீர பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 19 - 15 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18
news-image

சாதனைகள் நிலைநாட்டி வெற்றியீட்டிய கண்டி ஃபெல்கன்ஸ்

2022-12-07 09:41:16
news-image

பெனல்டியில் ஸ்பெய்னை வென்ற மொரோக்கோ கால்...

2022-12-06 23:45:38
news-image

போர்த்துக்கல் - சுவிட்சர்லாந்து மோதும் போட்டியுடன்...

2022-12-07 10:09:53
news-image

எல்பிஎல் 3ஆவது அத்தியாயத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது...

2022-12-06 19:27:29
news-image

மொரோக்கோவை 16 அணிகள் சுற்றில் இன்று...

2022-12-06 19:28:13
news-image

ஜெவ்னா கிங்ஸ் - கோல் க்ளடியேட்டர்ஸ்...

2022-12-06 15:26:45