ஜீ.எஸ்.பி. எமக்கு கிடைக்காவிட்டால் பாதிக்கப்படப்போவது புடவை கைத்தொழில் பேட்டைகளே - வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்

20 Nov, 2021 | 02:28 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

எமதுஅரசாங்கம் பிளவுபடாத வெளிநாட்டு காெள்கையையே பின்பற்றி வருகின்றது. அதன் மூலம் குறிப்பிட்ட ஒரு முனையின்பால் முற்றாக சாய்ந்துவிடுவதென்ற அர்த்தம் இல்லை. பிளவுபடாத வெளிநாட்டு கொள்கை இந்த காலத்துக்கு பொருத்தம் இல்லை என்ற நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோன்று ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் அபிவிருத்திக்கு தொடர்ந்து கடன்பெறமுடியாது. எமது மூலதனங்களை அதிகரித்துக்கொள்ளவேண்டும். எமது மூலதனங்களை பெற்றுக்கொள்வதற்கு 4முறைகள் இருக்கின்றன. 

முதலீடுகள், வியாபாரம், சுற்றுலா, வெளிநாட்டு செலாவனி ஆகிய துறைகள் மூலமே எமது மூலதனங்களை அதிகரித்துக்கொள்ள முடியுமாகின்றது. போட்டிமிக்க உலகிலேயே நாங்கள் இருந்து வருகின்றோம். 

அதனால் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அண்மையில் பங்களாதேஷ் பிரதமரை சந்தித்து கலந்துரையபோதும் அந்த நாடுகளும் மூலதனங்களை பெற்றுக்கொள்ள இவ்வாறுதான் செயற்படுவதாக தெரிவித்தார்.

அதனால் எமக்கும் அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதனை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். கொவிட் நிலைமையை கட்டுப்படுத்திக்கொண்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்குவர அனுமதித்திருக்கின்றோம். 

பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். அதற்கான சிறந்த சூழலை நாங்கள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். அதன் மூலமே வெளிநாட்டு செலாவணியை பெற்றுக்கொன்ள முடியும்.

அத்துடன் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை அதிகரித்துக்கொள்ளவேண்டும். தென்கொரியாவுக்கு எமது தொழிலாளர்களை அதிகம் அனுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதேபோன்று கொவிட் காரணமாக எமது வருமானம் குறையவில்லை. 

ஆனால் சுற்றுலாத்துறை மூலம வருடாந்தம் எமக்கு 4.2அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுவந்தோம். அந்த வருமானம் முற்றாக இல்லாமல் போயிருக்கின்றது. என்றாலும் ஏற்றுமதி வருமானம் குறையவில்லை.

மேலும் ஜீ.எஸ்.பி சலுகை பெற்றுக்கொள்வதற்காக எமது நாட்டுக்குவந்த ஐரோப்பிய தூதுக்குழுவுடன் கலந்துரையாடினேன். அவர்களின் நிபந்தனைகளை நிறைவேற்றிவருவதாக  தெளிவுபடுத்தினேன். 

ஜீ,எஸ்.பி எமக்கு கிடைக்காவிட்டால் அதனால் பாதிக்கப்படுவது புடவை கைத்தொழில் பேட்டைகளாகும். புடவை கைத்தொழில்சாலைகளில் 95வீதமானவர்கள் பெண்களே தொழில் புரிகின்றனர். 

அதேபோன்று எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜீ.எஸ்.பி. பாரிய நன்மையாக அமைந்தது. எமது நாட்டின் மீன் வளங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது ஜீ.எஸ்.பி ஊடாகவாகும். இந்த விடயங்களை ஐரோப்பிய தூதுக்குழு ஏற்றுக்கொண்டது. அதனால் ஜீ.எஸ்.பி சலுகையை எமது நாட்டுக்கு இல்லாமலாக்குவது எந்தவகையிலும் நியாயம் இல்லை.

மேலும் எமது வெளிநாட்டுக்கொள்கை குறிப்பிட்ட நாட்டுடன் இல்லை. பிளவுபடாத கொள்கை தற்காலத்துக்கு பொருத்தம் இல்லை என நல்லாட்சி அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்தவர் உலக நாடுகளுக்கு தெரிவித்திருந்தார்.

 நாங்கள் அந்த கூற்றுடன் இணங்கப்போவதில்லை. பிளவுபடாத கொள்கையின் குறிக்கோள் ஒரு முனையின்பால் முற்றாக சாய்ந்து விடுவதல்ல.

 ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் எது சரியானது என என்பதை தீர்மானித்து தீர்வுகாண்பதே தற்காலத்துக்கு பொருத்தமானது என்றே நாங்கள் நம்புகின்றோம். அனைத்து நற்புறவு நாடுகளுடன் இணைந்து செயற்படுவருகின்றோம். ஒரு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவது இலங்கையின் கொள்கை அல்ல.

இந்தியா எமது அண்மைநாடு. இந்தியாவுடன் நாங்கள் சிறந்த உறவை பேணிவருகின்றோம். 2 அரசாங்கங்களுடன் மாத்திரமல்ல, மக்கள் மத்தியிலும் இந்த உறவு பேணப்பட்டு வருகின்றது. அண்மையில் இந்தியாவின் குஷி நகரில் ஆரம்பிக்கப்பட்ட விமான நிலைய திறப்பு விழாவுக்கு எமது தேரர்கள் சென்றிருந்தமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

அதேபோன்று எமது அடிப்படை தேவைகளுக்கு அதிகம் எமக்கு உதவி செய்வது சீனா. சீனாவுடனும் நாங்கள் எமது உறவை பேணிவருகின்றோம். அத்துடன் எமது ஏற்றுமதியில் 65வீதம் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்குமாகும். 

அதனால் அனைத்து நாடுகளுடன் நாங்கள் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கின்றோம். அத்துடன் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதன் மூலம் எமது ஏற்றுமதி பொருட்ககளை அந்த நாடுகளுக்கு அனுப்பி அந்த நாடுகளின் சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11
news-image

கிளிநொச்சியில் கடல் அட்டைகளுடன் 13 பேர்...

2026-01-20 14:32:20
news-image

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள...

2026-01-20 15:19:48
news-image

அநுராதபுரத்தில் பதற்றம்: முன்னாள் இராணுவ சிப்பாய்...

2026-01-20 13:47:26