என்.வீ.ஏ.
இலங்கைக்கு எதிராக கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3 - 1 என்ற பெனால்டி முறையில் வெற்றிபெற்ற சிஷெல்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத்தையும் சுமார் 60 இலட்சம் ரூபா பணப்பரிசையும் வென்று நாடு திரும்புகின்றது.
இலங்கைக்கு அருகில் வந்த வெற்றி விலகிச் சென்றதால் அரங்கில் குழுமியிருந்த 5,000 இரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இப்போட்டியில் 83ஆவது நிமிடம் வரை 3 - 1 என்ற கோல்கள் கணக்கிலும் 90ஆவது நிமிடத்தில் 3 - 2 என்ற கோல்கள் கணக்கிலும் இலங்கை அணி முன்னிலையில் இருந்தது.
ஆனால், அலாஜிக்கின் தவறான 'கெட்டபல்ட்' தொழில்நுட்ப வியூகங்களினால் இலங்கை அணியின் மத்திய மற்றும் பின் களத்தில் 88ஆவது நிமிடத்தில் செய்யப்பட்ட இரட்டை மாற்றங்களினால் சிஷெல்ஸ் அணி 90ஆவது நிமிடத்தில் 3ஆவது கோலை போட்டு கோல் நிலையை சமப்படுத்தி இலங்கையின் வெற்றியை இல்லாமல் ஆக்கியது.
இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிப்பதற்காக மத்தியஸ்தரினால் பெனால்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டு அதில் 3 - 1 என சிஷெல்ஸ் வெற்றிபெற்று சம்பியனானது.
இலங்கையினால் சம்பியன் பட்டத்தை சூட முடியாமல் போனமைக்கு அலாஜிக் பின்பற்றிய 'கெட்டபல்ட்' தொழில்நுட்ப முறைமையே பிரதான காரணமாக அமைந்தது.
கோல் போட்ட ஆக்கிபை போட்டியின் 56ஆவது நிமிடத்திலும் 3 - 2 என்ற கோல் கணக்கில் இலங்கை முன்னிலையில் இருந்தபோது சலன சமீர, சமோத் டில்ஷான் ஆகியோரை 89ஆவது நிமிடத்திலும் பயிற்றுநர் அலாஜிக் மாற்றியமையே இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என கால்பந்தாட்ட விமர்சர்கள் சுட்டிக்காட்டினர்.
சிஷெல்ஸுடனான லீக் போட்டியிலும் அலாஜிக்கின் தவறான வியூகங்களே இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தது.
நேற்றைய போட்டியின் 4ஆவது நிமிடத்தில் 30 யார் தூரத்திலிருந்து மார்வின் ஹெமில்டன் ப்றீ கிக் மூலம் உதைத்த பந்து சிஷெல்ஸ் பின்கள வீரர் ஒருவரின் காலில் பட்டு கோலினுள் புக இலங்கை 1 - 0 என்ற கோல் கணக்கல் முன்னிலை அடைந்தது.
இதனால் உற்சாகமடைந்த இலங்கை அணியினர் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களது முயற்சிகள் வீண்போயின.
இடைவேளைக்கான உபாதையீடு நேரத்தில் சிஷெல்ஸ் அணியினர் தமது உயரத்தை சாதகமாக்கிக்கொண்டு கோல் நிலையை சமப்படுத்தினர்.
அந்த சந்தர்ப்பத்தில் உயர்ந்துவந்த பந்தை நோக்கித் தாவிய ஹியூபர்ட் இம்மானுவன் ஜியேன் தலையால் முட்டி கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.
இடைவேளையின் பின்னர் ஆக்ரோஷமாக விளையாடிய இலங்கை, 56ஆவது நிமிடத்தில் ஹர்ஷா பெரேரா எறிந்த நீண்ட தூர 'த்ரோ இன்' பந்தை மிக இலாவகமாக மொஹம்மத் ஆக்கிப் கோலினுள் புகுத்தினார். (இலங்கை 2 - 1).
இந்த கோலினால் பெரு உற்சாகம் அடைந்த இலங்கை அணியினர் மேலும் கோல் போடுவதற்கு முயற்சித்தனர். ஆனால், கோல் போட்ட 2 நிமிடங்களில் ஆக்கிபை பயிற்றுநர் அலாஜிக் மாற்றியதால் ஆட்டத்தில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது.
எவ்வாறாயினும் போட்டியின் 72ஆவது நிமிடத்தில் சிஷெல்ஸ் பெனால்டி எல்லைக்குள் இழைக்கப்பட்ட தவறினால் இலங்கைக்கு பெனால்டி வழங்கப்பட்டது.
அந்தப் பெனால்டியை கோலாக்கிய வசீம் ராசீக், இலங்கை அணியை 3 - 1 என முன்னிலையில் இட்டார்.
ஆனால், சிசெஷ்ல்ஸ் அணியினர் தொடர்ந்து போராட்டக் குணத்துடன் விளையாடி 85ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை இனாமாகப் பெற்றது.
சிஷெல்ஸ் அணித்தலைவர் ஸ்டீவ் பெனட் மாரி பரிமாறிய பந்தைப் பெற்றுக்கொண்ட ஜியென் மார்க் ப்றெட் வலது பக்கத்திலிருந்து கோலை நோக்கி உதைத்தார்.
இலங்கையின் பெனால்டி எல்லைக்குள் பந்தைப் பெற்றுக்கொண்ட வுட்லி தம்பூ அதனை கோல் நோக்கி உதைத்தார். அப் பந்து சரித்த ரத்நாயக்கவின் தலையில் பட்டு திசை திரும்பி கோலினுள் புகுந்தது. (சிஷெல்ஸ் 2 - 3).
இதனைத் தொடர்ந்து 90ஆவது நிமிடத்தில் வுட்லி தம்பூ கோல் போட்டு கோல் நிலையை 3 - 3 என சமப்படுத்தினார். போட்டி சமநிலையில் முடிவடைந்ததால் வெற்றி அணியைத் தீர்மானிப்பதற்காக பெனல்டி முறையை மத்தியஸ்தர் அமுல்படுத்தினார்.
சிஷெல்ஸ் வீரர் மெக்சிம் ப்ரன்ச்செடடின் முதலாவது பெனால்டியை சுஜான் பெரேரா அலாதியாகத் தடுத்தார். ஆனால், சிஷெல்ஸ் வீரர்களான வுட்லி தம்பு, இம்மானுவல் ஜியேன், பெரி ஏர்னஸ்டா ஆகியோர் அடுத்த 3 பெனால்டிகளை கோலாக்கினர்.
இலங்கை சார்பாக மார்வின் ஹெமில்ட் பெனால்டியை தவறவிட்டார். அசிக்கூர ரஹுமானின் பெனல்யை சிஷெல்ஸ் கோல்காப்பாளர் லயனல் மான்னி தடுத்து நிறுத்தினார். 3ஆவது பெனால்டியை கோலாக்கிய சுஜான் பெரேரா இப்படித்தான் பெனால்டி கோல் போடவேண்டும் என சக வீரர்களுக்கு எடுத்துக்காட்டினார்.
ஆனால் சரித்த ரத்நாயக்க உதைத்த 4ஆவது பெனல்டிய மான்னி மீண்டும் தடுத்த நிறுத்த சிஷெல்ஸ் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது.
இந்த சுற்றுப் போட்டியில் அதிகப்படியான 7 கோல்களைப் போட்ட வசீம் ராசீக்குக்கு தங்கப் பாதணியும் மிகவும் பெறுமதிவாய்ந்த வீரராக தெரிவான சுஜான் பெரேராவுக்கு தங்கப் பந்தும் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM