கொழும்பு 07 − ரீட் மாவத்தையிலுள்ள கட்டிடமொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் இன்று (20) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

வெடிப்புச் சம்பவத்தின் பின்னர், பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர தீயணைப்புப் பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்த வெடிப்பு சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புக்களோ பதிவாகவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

May be an image of 3 people and outdoors

May be an image of 5 people, people standing and outdoors

May be an image of 9 people, people standing and outdoors

May be an image of 5 people and outdoors

May be an image of 9 people, people standing, fire and outdoors

May be an image of 14 people, people standing and outdoors

May be an image of 4 people and outdoors