புதிய கட்சி ஒன்று அமைப்பது தொடர்பில் நாங்கள் திட்டமிடவில்லை. கூட்டு எதிரணியில் உள்ள ஸ்ரீலங்க சுதந்திர கட்சி உறுப்பினர்களே திட்டமிட்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

புதிய கட்சி உருவாக்கம் 100 வீதம் மெய்யான காரணம் என்று அவர் சிங்கள ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.