பதிவிடும் முன் ஆராயுங்கள்! பகிர முன் சிந்தியுங்கள் - இன்னொருவரின் கண்ணீருக்கு நீங்களும் காரணமாகலாம்

Published By: Digital Desk 2

20 Nov, 2021 | 01:01 PM
image

“நான்கு பிள்ளைகளையும் என்னிடம்பாரப்படுத்திவிட்டு இருவரும் சென்றுவிட்டார்கள்” என கூறும் போது 56 வயதான “அமீனா உம்மா” வின் கண்களில்இருந்து கண்ணீர் ததும்புகின்றது. அவரின் வார்த்தைகளும் தடுமாறுகின்றன.

எனினும் தனது கால்களைக் காண்பித்த அவர் “கால் வலியின் காரணமாக என்னால் சரியாக வீட்டு வேலைகளைச்செய்ய முடியவில்லை. எனினும் பேரப்பிள்ளைகளுக்காக என்னால் இயன்றதை சமைத்து அவர்களைப் பராமரிக்கின்றேன்” என அவர்  கூறுகின்றார்.

புத்தளம்மாவட்டம் நாத்தாண்டியா, கொட்டராமுல்லை பிரதேசத்தில் வசிக்கின்றார்“அமீனா உம்மா”. அவர்  தனது மகளின்பிள்ளைகளான 12 வயது சிறுமியையும், 8, 18, 19 வயது சிறுவர்களையும் உறவுகளின் உதவியுடன் கடந்த ஒரு வருடமாகத் தனதுஅரவணைப்பில் வளர்த்து வருகின்றார்.

இந்தநான்கு பிள்ளைகளினதும் தந்தை, “பௌசுல் அமீன்” இலங்கையில் ஏப்ரல் 21,2019 அன்று நடந்த ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான காலப்பகுதியில் இனவாதவன்முறையாளர்களால் கொல்லப்பட்டார். அடுத்த ஒரு வருடத்தில்அவரின் மனைவி பாத்திமா ஜிப்ரியா  மே மாதம்முதலாம் திகதி வெள்ளிக்கிழமை உடல் நலக் குறைவால் உயிரிழந்திருந்தார்.

முஸ்லிம்எனக் கூறிக்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர்தாக்குதல் தொடர்பான தகவல்கள், தாக்குதல் இடம்பெற்று சிலமணித்தியாலங்களிலேயே  வெளிச்சத்திற்குவந்திருந்தது.

இதையடுத்துநாட்டில் முஸ்லிம் இனத்தவருக்கு எதிரான பல வெறுப்பு பேச்சுகளும் பிரசாரங்களும்பாரம்பரிய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகின. இதனிடையே சிலாபத்தைச் சேர்ந்த “ஹஸ்மர் அமீட்’ தனது பேஸ்புக்கில்வெளியிட்டிருந்த பதிவு பெரும்பான்மை சமூகத்தவரினால் தீவிர வாத கண்ணோட்டத்தில்பார்க்கப்பட்டது.

 ‘DONT LAUGH MORE 1 DAY U WILL CRY’ (அதிகம்சிரிக்காதே ஒருநாள்அழுவாய்) என்ற விதத்தில் ‘ஹஸ்மர் ஹமீத்’ பேஸ்புக்கில் பக்கத்தில் ஒருவரின் பதிவுக்கு கருத்திட்டிருந்தார்.எனினும் இதனை  ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்திதவறாக அர்த்தப்படுத்திக் கொண்டசிலர் அவரை தாக்குவதற்காகச் சிலாபம்நகரில் உள்ள அவரின் வீட்டையும் கடையையும் முற்றுகை இட்டனர்.

இதையடுத்து சிலாபம் நகரில் பதற்ற நிலை உருவானது. பிரதேச அமைதியை உறுதி செய்யும் வகையில்சிலாபம் நகரப் பகுதிக்கு மேமாதம் 12 ஆம் திகதி முற்பகல் முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கைப் பிறபிக்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்தது.

அத்தோடு, 38 வயதான அஹமட் ஹமீத் ஹஸ்மரை சிலாபம் பொலிஸார் சந்தேகத்தில்  கைது செய்திருந்தனர். சிலாப நகரம் பொலிஸாரினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும் இந்த வெறுப்பு பேச்சுகளால்தூண்டப்பட்ட பலர் ஆயுதங்களுடன் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிராமங்களை நோக்கிப் படை எடுத்தனர்.

இதன் போது பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபார  நிலையங்கள்  மற்றும் உடைமைகள் சேதமாக்கப்பட்டன.

இதன் பின்னணியில்,மே மாதம் 13 திகதி இரவு சிலாபம் கொட்டராமுல்லை – ரொபட்வத்தை, பகுதியில்மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்திருந்த “மர்ஹும் பௌசுல் அமீன்” தனது வீட்டின் ஒரு பகுதியில் கைத்தொழிலை முன்னெடுத்து வந்ததாக அவரின் சகோதரர் முகம்மத் நஜீம் (46), தெரிவிக்கின்றார்.

“அன்று நோன்பு தினம், பௌசுல் அமீனின்  பள்ளியில் தொழுகையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியிருந்தார். நாட்டில் அமுலில் இருந்த ஊரடங்குக்கு மத்தியில் பெரும் திரளான பெரும்பான்மை இனத்தவர் ஆயுதங்களுடன் எமது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தார்கள்.

 இந்த பகுதியில் முஸ்லிம்கள் சிறிய எண்ணிக்கையிலேயே வசிக்கின்றனர். எனவே இந்த பகுதியை அவர்கள் இலக்கு வைத்திருந்தார்கள்.

உள்ளூரை சேர்ந்த சிலரும் அடையாளம் தெரியாத பலரும் தாக்குதலை மேற்கொள்ள வந்திருந்தனர். எனது சகோதரர், மனைவி மற்றும் பிள்ளைகளை அறையில் பாதுகாப்பாகவைத்து மூடிவிட்டு தனது உடைமைகளுக்குச் சேதம் விளைவித்துவிடுவார்களோ என்ற பயத்தில் கையில் ஒரு கோடரியுடன் வெளியில் வந்துள்ளார்.

அங்கு வந்திருந்த கலவரகார்களிடமிருந்து உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடிய 'பௌசுல் அமீன்' அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.” என பௌசுல் அமீன் இறுதி நிமிடங்களை விவரிக்கின்றார் அவரின் சகோதரர் முகம்மத் நஜீம். 

“பௌசுல் அமீன்தாக்கப்பட்டு வீட்டின் முன்னால் விழுந்திருந்ததை அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் பார்த்தனர். மனதளவில் அவர்கள்மிகவும் பாதிக்கப்பட்டார்கள், பௌசுல் அமீனின்மனைவிக்கு அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டுவரப் பல மாதங்கள் ஆகின. இருந்தும் அடுத்த ஒருவருடத்தில் அவரும் உயிரிழந்தார். பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை இந்த சம்பவம் முழுமையாக பாதித்துள்ளது“ எனத் தெரிவிக்கின்றார் முகம்மத் நஜீம்.

இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு1 வருடத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தினால் வழக்கு நடத்தப்படுகின்றது. எனது சகோதரரின் இறப்புக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்கின்றார் தற்போது பெற்றோரை இழந்து வாடும் நான்கு சிறுவர்களுக்கும் ஆதரவாக இருக்கும்முகம்மத் நஜீம்.

“பௌசுல் அமீன்” கொலை தொடர்பான வழக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. எனினும் இந்ததாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு எதிராகக் கண்ணில் கண்ட சாட்சியங்கள் இல்லாததால் இதில் கைது செய்யப்பட்ட 06 பேரும் ஒரு வருடங்களின் பின்னர் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக இந்த வழக்கில் முன்னிலையான வழக்கறிஞர் சாதிக்குல் அமீன்தெரிவிக்கின்றார்.

தேவை ஏற்படின் சட்டமா அதிபரே இந்த வழக்கை மேல்முறையீடுசெய்வதா இல்லையா என்ற முடிவை எடுப்பார் என வழக்கறிஞர் மேலும் கூறினார்.

 இந்த தொடர் வன்முறைகாலத்தில்  இலங்கையின், மினுவாங்கொட, கொட்டாரமுல்ல, பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் ஹெட்டிப்பொல, கொட்டம்பபிட்டி மற்றும் பிங்கிரிய தேர்தல் தொகுதியில் கினியம உள்ளிட்ட பகுதிகள் தாக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு சமூக ஊடகங்கள் மற்றும் பாரம்பரிய ஊடகங்களில்வெளியிடப்பட்ட  இலங்கை  முஸ்லிம்களுக்கு எதிரான வெறுக்கத்தக்கப் பேச்சு குறித்து ஜித்தாவை தளமாகக் கொண்ட   57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பானஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில் "நாட்டில் உள்ள சில குழுக்களால் மிரட்டல், முஸ்லிம்-விரோத பேச்சுக்கள் மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து வருவது"   குறித்துஇக் குழு கவலை வெளியிட்டிருந்தது.

இந்த தாக்குதலை நடத்த வந்த குழுவைத் தடுத்துத் திருப்பி அனுப்பும் நோக்கில் செயற்பட்டிருந்த பெரும்பான்மை இனத்தவரான சிரிபால (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்த சம்பவம் தனது வாழ்க்கையில் பாரிய மாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.

45 வயதான சிரிபால, கொட்டராமுல்லையை அண்மித்த பெரும்பான்மையினர் அதிகமாக வசிக்கும் கிராமத்தில் முக்கிய சமூக சேவையாளராக உள்ளார். இந்த சம்பவத்திற்காகத் தாம் இன்றும் மனம் வருந்துவதாக அவர் தெரிவிக்கின்றார்.

நாட்டில் அப்போது பரப்பப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில அரசியல் வாதிகளின் தூண்டுதலே இந்த தாக்குதலுக்குக் காரணம் எனக் கூறும் அவர் இந்த தாக்குதலை மேற்கொள்ள கொட்டராமுல்லையை அண்மித்தாக, பெரும்பான்மையினர் அதிகமாக வசிக்கும் 3 கிராமத்தின் குழுக்கள் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகின்றார்.

“ரமழான்  பெருநாள் காலத்தில் நாங்கள் எங்கள் வீட்டில் உணவு சமைப்பதில்லை, முஸ்லிம் நண்பர்கள் எம்முடன் உணவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். 

என்னிடம் அதிகமாகத் தளபாடங்களைச் செய்பவர்களும் அவர்கள் தான். எனினும் இந்த சம்பவத்தின் பின்னர் அநேகமான முஸ்லிம் நண்பர்கள் என் முகத்தைக் கூட பார்ப்பதில்லை” என்கிறார்  சிரிபால.

தாக்குதல் நடத்தச் சென்ற குழுவை தடுத்து திருப்பி அனுப்பவே தாம் சென்றிருந்த போதும் அவர்களுடன் இருந்ததால் தாமும் தாக்குதல் நடத்த வந்ததாக முஸ்லிம்இனத்தவர்கள் சந்தேகிக்கின்றமையே இதற்கு காரணம் என்கின்றார் அவர்.

“பௌசுல் அமீன்” கொலை செய்யப்பட்டபோது அதனைத் தடுக்க முடியாது போனதையிட்டு மனம் வருந்தும் அவர் இதன் பின்னர் தமது மனதில் தோன்றிய குற்ற உணர்வு காரணமாகத் தாம் முஸ்லிம் இனத்தவரின் வர்த்தக நிலையங்களுக்குச் செல்வதையும் கூட அண்மைக் காலம் வரை தவிர்த்து வந்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்த சம்பவத்தினால் தனது பிள்ளைகளின் கல்வி நிலைமை மற்றும் தனது தொழில் பாதிக்கப்பட்டதாகக் கூறும் சிரிபால, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுச் சிறைபிடிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பட்ட இன்னல்களைத் தாம் கண்கூடாகப் பார்த்ததாகவும் தெரிவித்தார்.

இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற இடமளிக்கக் கூடாது என சிரிபால கூறுகின்றார்.

இந்த கலவரத்திற்கு நாட்டில் அனைத்து முஸ்லிம் மக்களையும் இலக்கு வைத்துப் பரப்பப்பட்ட வெறுப்பு பேச்சுகளும் வதந்திகளுமே காரணம் என்கின்றார். கொட்டராமுல்லைக்கு அண்மித்த கிராமமான மொரகெலை விகாரையின் பொளத்த பிக்கு ஸ்ரீ சுமனதிஸ்ஸ தேரர்.

“சம்பவத்தின் போது பல முஸ்லிம் மக்களுக்கு எமது விகாரையின் கட்டடத்தில் நாங்கள் அடைக்கலம் கொடுத்தோம். புத்தர் எந்த ஒரு பிரச்சினைக்கும் சண்டை இடுவதையோ தாக்குதல் மேற்கொள்வதையோ வழியாகக் கூறவில்லை. 

ஒரு தரப்பினர் செய்த பிழைகளுக்கு நாட்டின் அனைத்து முஸ்லிம் மக்களும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் அல்ல” என  தேரர் தெரிவித்தார்.

நாம்ஒவ்வொருவரும்உணர்ச்சி வசப்பட்டு ஆயுதங்கள் ஏந்துவதை தவிர்த்து பிரச்சினைகளை பேசி தீர்க்கவே முன்வரவேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம் மக்களுடன் இருந்த ஒற்றுமை மீண்டும் மலர வேண்டும் என பிக்கு வலியுறுத்தினார்.

இலங்கைகணினி அவசர தயார் நிலை ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகளுக்கு அமைய இலங்கையில், கடந்த பத்து ஆண்டுகளில்சமூக ஊடங்கள் காரணமாக இடம்பெறும் ஒட்டுமொத்த குற்றச்செயல்கள் மற்றும் சம்பவங்கள் பாரியஅளவில்  அதிகரித்துள்ளமையைகீழ் உள்ள வரைபு காட்டுகின்றது.

குறிப்பாக 2019 ஆம் ஆண்டுக்குப்பின்னர்,நாட்டில் சமூக ஊடகங்கள் காரணமாக 16000 க்கும்அதிகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை ஒருங்கிணைப்பு மையத்தின்தகவல் பாதுகாப்பு பொறியாளர் என் தீனா தயாலன் தெரிவிக்கின்றார்.

இந்தசம்பவங்களில் போலிச்செய்தி,வெறுப்புப்பேச்சு, உள்ளிட்ட அனைத்து குற்றச்செயல்களும்அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

சமூக ஊடகச் சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு உதவுவது தமது நிறுவனத்தின் முக்கிய  சேவை  எனஅவர் கூறினார்.

 இதற்குசான்றாக தமது நிறுவனம் பேஸ்புக்குடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பேஸ்புக் குழுவின் உதவி தேவைப்படும்போது அதனை நிர்வகிப்பதாகவுதம் அவர் குறிப்பிடுகின்றார்.

இது தவிற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் வெறுப்புணர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களை அரசு முடக்கியது.

அத்தோடு சமூக ஊடங்களில் பரப்ப்பட்ட போலி செய்திகள் மற்றும் இன முரன்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுத்தது.

எமது நாட்டில் கிட்டத்தட்ட 7 மில்லியன் பேர்  தினமும்பேஸ்புக்  உள்ளிட்டசமூக ஊடகங்களில் பிரவேசிக்கின்றனர். எனவே மற்ற தளங்களுடன் ஒப்பிடும்போது பேஸ்புக்கின் சக்தி மிகப்பெரியது என டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான நிபுணர் பிரசாத் பெரேரா தெரிவிக்கின்றார்.

இவ்வாறான சமூக ஊடகங்களினால்பகிரப்படும் போலி பிரசாரங்கள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையான மிகைப்படுத்தப்பட்டபதிவுகள், ஒருவரையோ அல்லது ஒரு குழுவையோ தாக்கும் நோக்கில் அல்லது ஒரு விடயத்தின் மீது பரபரப்பை அதிகரிக்கவும்,  அரசியல் இலாபங்கள்,மற்றும் கலவரங்களை ஏற்படுத்தல் அல்லது அதிக ஊடக கவனத்தை ஈர்ப்பதற்காக முற்றிலும் ஊக்குவிக்கப்படுவதாகஅவர் சுட்டிக்காட்டுகின்றார்.

போருக்கு பின்னரான சூழலில், 2014 அளுத்கம கலவரம் மற்றும் 2018 ஆம் ஆண்டு அம்பாறை மற்றும் திகன அமைதியின்மை என்பன நாட்டில் சமூகங்களுக்கிடையில் வன்முறைக்களை தோற்றுவிக்கபட்டமைக்கு வெறுப்புப் பேச்சு மற்றும் பொய்யான  தகவல்கள்எவ்வாறு பங்களிக்கிறன என்பதை காட்டுகின்றன. 

இலங்கையில் போலியான செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சு காரணமாக பல கலவரங்கள் தோற்றுவிக்கபப்ட்ட போதிலும் நாம் அதற்கு எதிரான எடுத்துள்ள நடவடிக்கைகள்போதுமானதா? என்பது கேள்விக்குறியானது என அவர் கூறுகின்றார்.

“2018 ஆம் ஆண்டில், எட்வின் டோங் இலங்கையில் வெறுப்பு இடுகையை அகற்றுவதில் தோல்வியடைந்தது.பேஸ்புக் 'கடுமையான தவறை' ஒப்புக்கொண்டது. இன்னமும் மக்கள் போலியான செய்திகளைப் பகிர்வதில் அல்லது அதனை ஊக்குவிக்கின்றனர்.” என்றார்.

 எனினும்இப்போது அரசாங்கம் போலிச் செய்திகளை உருவாக்கும் நபர்களுக்கு எதிராக சில கடுமையான சட்டங்களையும், சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளன. ஆனால் அவை எந்த அளவில் செயல்படுத்தப்படுகின்றது என்பது விவாதத்திற்குரியதுஎன டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான நிபுணர் பிரசாத் பெரேரா குறிப்பிடுகின்றார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் “சமூக உடகங்களில் பகிரப்படும் உள்ளடக்கங்கள்களை ஊக்குவிப்பதற்கு முன்னர் அதன் நம்பக தன்மை தொடர்பில் உண்மையைச் சரிபார்க்க அவர்களுக்கு கற்பிப்பது இவ்வாறான கலவரங்கள் ஏற்படாது இருக்க மிகவும் முக்கியம் என்று நான் நம்புகிறேன்”

“உறுதிசெய்யப்பட்டாத மற்றும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக் கூடிய எந்த ஒரு பதிவையும் ஊக்குவிக்க வேண்டாம்” என  நிபுணர்சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களை கேட்டுக்கொள்கின்றார்.

பிரசாத் பெரேரா

“ஒரு தகவல் அல்லது செய்தியை வித்தியாசமானதாக நீங்கள் உணர்ந்தால் முதலில் அதன் உண்மை தன்மையை சரி பாருங்கள் அவ்வாறு இல்லாமல் நீங்கள் பொய்யான மற்றும் சமூக அதிர்வலைகளை தூண்டும் வகையிலான பதிவுகளை  ஊக்குவிப்பதால் ஒருகலவரத்திற்குநீங்கள் வழிவகுக்கலாம்” என  டிஜிட்டல்பாதுகாப்பு தொடர்பான நிபுணர் பிரசாத் பெரேரா அறிவுறுத்துகின்றார்.

ஆர்.ஜெயந்தி 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49