ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி வீரரும் முன்னாள் தென்னாபிரிக்க வீரருமான ஏ.பி.டி.வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவருடனான உரிமை தொடர்பை திறம்பட முடித்துக் கொண்டதாகவும் பெங்களூரு அணி அறிவித்துள்ளது.

37 வயதான ஏ.பி.டி.வில்லியர்ஸ் 2011 இல் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான தனது பயணத்தை ஆரம்பித்தார்.

மொத்தமாக அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் 10 சீசன்களில் விளையாடியுள்ளார்.

ஏ.பி.டி.யின் இந்த அறிவிப்பு மூலம் அவரது 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகின்றது.

அவர் தென்னாபிரிக்க அணிக்காக 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.