தனது பிள்ளைகளை முறையான வசதிகளுடன்கூடிய பாடசாலைகளில் சேர்க்க நினைப்பது பெற்றோர்களின் ஒரு உணர்வுபூர்வமான எண்ணமாகும். அதனைக்கூட பிரபல்யம் என்ற வார்த்தையைக்காட்டி எமது நியாயமான கோரிக்கைகளை புறக்கணிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் வைத்தியர் சாய் நிரஞ்சன் தெரிவித்தார்.

மேலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கல்வியமைச்சில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது நோய் காவு வண்டியில் உணவு கொண்டு சென்றார்கள் என கூறப்படும் கருத்தையும் மறுத்ததோடு அவ்வாறான விடயங்களை காட்டி எம்மை ஆர்ப்பாட்டக்காரர்களாக சித்தரிக்க வேண்டாம் எனவும் அரசாங்கத்தரப்பினரிடம் வேண்டுகொள் விடுத்தார்.

அரச வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளை அரச பாடசாலைகளில் இணைப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.