புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை போலந்து எல்லையில் உள்ள முக்கிய முகாம்களில் இருந்து பெலருஸ் நகர்த்தியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெலருஸ் வேண்டுமென்றே நெருக்கடியை உருவாக்கி, மத்திய கிழக்கிலிருந்து மக்களை விமானத்தில் ஏற்றி, போலந்து மற்றும் லிதுவேனியாவிற்குள் இடம்பெயரச் செய்ய முயற்சிப்பதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
அந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பெலருஸ் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
மேற்கு பெலாருஸின் எல்லையில் உள்ள முகாம்கள் வியாழக்கிழமை முற்றிலும் காலியாக இருந்ததாக பெலாரஷ்ய பத்திரிகை அதிகாரி உறுதிப்படுத்தியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பெலருஸ் -போலந்து எல்லையில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவதற்காக ஈராக் செல்லும் விமானம் தலைநகர் மின்ஸ்கில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டது என்று விமான நிலையம் உறுதிபடுத்தியுள்ளது.
விமானத்தில் 374 ஈராக்கிய குடியேற்றவாசிகள் இருந்ததாக பெலாருஸ் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் நடால்யா ஐஸ்மோன்ட் தெரிவித்தார்.
கோடையில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பெலருஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அடைய முயற்சிக்கின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM