பல மாத போராட்டங்களுக்குப் பிறகு சர்ச்சைக்குரிய மூன்று விவசாயச் சட்டங்களை இரத்து செய்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் ஓராண்டுக்கு மேலாக முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Image

புதிய சட்டம் விவசாயத்தில் தனியார் நிறுவனங்களின் நுழைவை அனுமதிக்கும் என்றும் அது அவர்களின் வருமானத்தைப் பாதிக்கும் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந் நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பினை விவசாய சங்கங்கள் ஒரு பெரிய வெற்றியாக பார்க்கின்றன. 

ஆனால், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மாநிலத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த மாநிலங்களும் அதிக விவசாயிகளைக் கொண்டவை - அதனால் குறித்த சட்டமூலத்தை இரத்து செய்ய கட்டாயப்படுத்தியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.