36 வயதான பெண் சக ஊழியருக்கு பாலியல் தொடர்பான மோசமான பதிவுகளை அனுப்பியதற்காக அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் டிம் பெய்ன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

Image

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒரு ஊடக மாநாட்டில் பெய்ன் தனது இராஜினாமாவை உறுதிபடுத்தியுள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர்,

அவுஸ்திரேலிய ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான எனது முடிவை இன்று அறிவிக்கிறேன். இது கடினமான முடிவு, ஆனால் எனக்கும் எனது குடும்பத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் சரியான முடிவு.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் அப்போதைய சக ஊழியருடன் உரை பரிமாற்றத்தில் ஈடுபட்டேன்.

அந்த நேரத்தில், குறித்த உரை பரிமாற்றம் ஒரு முழுமையான அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் ஒருமைப்பாடு பிரிவு விசாரணைக்கு உட்பட்டது, அதில் நான் முழுமையாக பங்கேற்றேன் மற்றும் வெளிப்படையாக பங்கேற்றேன் என்றார்.

இது தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,

அவுஸ்திரேலிய ஆடவர் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான தனது இராஜினாமாவை டிம் பெய்ன் வாரியத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

பெய்னின் இராஜினாமாவை வாரியம் ஏற்றுக்கொண்டது, இப்போது புதிய டெஸ்ட் தலைவரை அடையாளம் கண்டு நியமிக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.