(எம்.மனோசித்ரா)

அருட்தந்தை சிறில் காமினியும் மேலும் சிலரும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளனர். 

அதன் காரணமாகவே அவர் குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். எனவே இவ்விடயத்தை அரசியலாக்க வேண்டாம் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அருட்தந்தை சிறில் காமினி அல்லது வேறு யாராக இருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தொடர்பில் தகவல் தெரிந்திருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டும். 

பிரதான சூத்திரதாரி யார் என்று தெரிந்தால் அதனை தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.

மதத் தலைவர்களை அநாவசியமாக விசாரிக்க வேண்டிய தேவை கிடையாது. ஆனால் அருட்தந்தை சிறில் காமினி அல்லது வேறு யாராக இருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தொடர்பில் தகவல் தெரிந்திருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டும். பேராயரை அவமதித்தவர்கள் எதிர்தரப்பில் உள்ளனர். அவருக்காக நாமே குரல் கொடுத்தோம்.

எவ்வாறிருப்பினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும். 

எனவே இதன் சூத்திரதாரிகளை நாம் அனைவரும் இணைந்து தேடுவோம். மாறாக அருட்தந்தையை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

அருட்தந்தை சிறில் காமினியும் மேலும் சிலரும் புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளனர். 

அதன் காரணமாகவே அவர் குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். எனவே இவ்விடயத்தை அரசியலாக்க வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கோருகின்றோம் என்றார்.