(எம்.மனோசித்ரா)
உத்தியோகப்பூர்வ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள கப்பல் துறையிலான ஒத்துழைப்பின் முன்னுரிமை, வர்த்தக உடன்படிக்கையை நோக்கி முன்னேறுவது குறித்து இலங்கை - பங்களாதேஷ் இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பங்களாதேஷ் பிரதமர் ஷைக் ஹசீனாவை டாக்காவிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

கொவிட் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் வெற்றி மற்றும் பரந்தளவிலான தற்போதைய பிரச்சினைகள் குறித்து பங்களாதேஷ் பிரதமருக்கு அமைச்சர் பீரிஸ் இதன்போது விளக்கமளித்தார்.
உத்தியோகப்பூர்வ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள கப்பல் துறையிலான ஒத்துழைப்பை பொறுத்தவரையில் முன்னுரிமை, வர்த்தக உடன்படிக்கையை நோக்கி முன்னேறுவது குறித்து இதன்போது குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது.
ஒரு விரிவான டிஜிட்டல் மயமாக்க திட்டத்தை தொடங்குவதற்கும், விவசாயிகளின் அப்புறுப்படுத்தல் வருமானத்தை அதிகரிப்பதற்கும் தனது அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளை அமைச்சர் பீரிஸிடம் பங்களாதேஷ் பிரதமர் விபரித்தார்.
கொழும்பிற்கும் டாக்காவிற்கும் இடையிலான விமான சேவையை அதிகரித்தல் மற்றும் சுற்றுலாத்துறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர்கள் குழுவின் 21 ஆவது கூட்டத்தொடரில் ஐயோராவின் துணைத்தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பங்களாதேஷிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.