(வத்துகாமம் நிருபர்)

கட்டுகஸ்தோட்டைப் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டுகஸ்தோட்டைப் பிரதேசத்தில் வாடகைக்கு வீடொன்றை எடுத்து அதில் தனது தாயும் சகோதரன் ஒருவரும் வசித்து வந்துள்ளனர்.

தனது தாய் இளைய மகனை மேலதி வகுப்பு ஒன்றுக்கு அனுப்பி விட்டு வீடு திரும்பிய போது தனது மகள் சுருக்கிட்ட தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேற்படி மாணவி இம்முறை க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.