பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமயவில் இடம்பெற்ற தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு

Published By: Digital Desk 3

18 Nov, 2021 | 03:26 PM
image

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமயவில் வருடாந்தம் நடைபெறும் கிரி அம்மா தானம் (கிரி அம்மா தானய) வழங்கும் புண்ணிய நிகழ்வு இன்று (18.11.2021) முற்பகல் விகாரையில் நடைபெற்றது.

நாராஹேன்பிட அபயராமாதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்திற்கமைய இப்புண்ணிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வருடாந்தம் நடத்தப்படும் இந்த தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வானது இம்முறை 19ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்டது.

சமய வழிபாடுகளில் ஈடுபட்ட கௌரவ பிரதமர் மஹாசங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வில் ஈடுபட்டார்.

அதன் பின்னர்  பிரதமரின் தலைமையில் நூறு கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கும் நிகழ்வை குறிக்கும் வகையில்  பிரதமரினால் ஒரு கர்ப்பிணி தாய்க்கு உலர் உணவு பொதி வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது கங்காராம விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் அனுசாசனம் செய்கையில்,

எமது தாய்நாட்டை நேசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் உள்ள அதே அபிலாசையும், விருப்பமுமே  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் உள்ளது. 

இந்நாட்டின் முப்பது ஆண்டு கால யுத்தத்தை நிறைவு செய்வதற்கான  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவம் மற்றும் துணிச்சலின் மூலம் நாட்டை மீட்டெடுக்க முடிந்தது. 

இலங்கை வரலாற்றில் நமது நாடு பல பேரழிவுகளை கடந்து வந்துள்ளது.

இந்நாட்டை சுபீட்சமானதொரு எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்று தற்போது மற்றுமொரு எதிர்பார்ப்புள்ளது. அதற்கான பலமும் தைரியமும்  பிரதமருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆசீர்வாத பூஜை ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. 

வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கௌரவ பிரதமரின் வாழ்க்கை பயணத்தின் நிழலாக விளங்கினார். அதிகாரத்தில் இருக்கின்ற போதிலும், இல்லாத போதிலும் இன்றும் என்றும் இந்த புண்ணிய நிகழ்வை வணக்கத்திற்குரிய ஆனந்த தேரர் நிகழ்த்துவார். 

இந்த ஆசீர்வாத பூஜையானது இந்நாட்டை நேசிக்கும் அனைவரது சார்பிலும் கௌரவ பிரதமருக்கு செய்யும் பூஜை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த பிறந்த நாள் மகிழ்ச்சியான மற்றும் வளமான பிறந்தநாளாக அமையவும், கடந்த ஆண்டுகளை விட எதிர்வரும் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைய பிரார்த்திப்பதாக கலாநிதி வணக்கத்திற்குரி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.

இதன்போது கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள் கௌரவ பிரதமரினால் விடுவிக்கப்பட்டன.

குறித்த புண்ணிய நிகழ்வில் நாராஹேன்பிட அபயராமாதிபதி வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர், பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ,  அமைச்சர்களான காமினி லொகுகே, நிமல் சிறிபால டி சில்வா, சரத் வீரசேகர,  இராஜாங்க அமைச்சர்களான சிறிபால கம்லத், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ருக் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04