பொறுப்பற்ற எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை மக்கள் ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார்கள் - நிமல் லன்சா

Published By: Digital Desk 3

18 Nov, 2021 | 03:14 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் பொருளாதார சவாலை வெற்றி கொள்வது எவ்வாறு என்பது தொடர்பில் எவ்வித நிலைப்பாட்டினையோ அல்லது அனுபவத்தினையோ கொண்டிராத எதிர்க்கட்சி அரசியல் நோக்கங்களுக்காக மாத்திரம் செயற்படுவதை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கொவிட் நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கி மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்கு நாடளாவிய ரீதியில் கொவிட் கொத்தணிகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தையே எதிர்க்கட்சி முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

கொவிட் தொற்று பரவிக் கொண்டிருப்பதால் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டை முடக்கவும் , போக்குவரத்து கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் நேர்ந்தது.

இதன் காரணமாக நாட்டில் உற்பத்தி வருமானம் சரிவடைந்தது. மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது.

தடுப்பூசி ஏற்றல் மற்றும் மக்கள் சுகாதார பாதுகாப்புடன் வழங்கிய ஒத்துழைப்புக்களின் காரணமாக நாடு வழமைக்கு திரும்பியுள்ளதோடு , பொருளாதார சவால்களை வெற்றி கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக எதிர்க்கட்சி செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

கொவிட் அச்சுறுத்தலின் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகள் பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி முற்றாக பாதிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கொவிட் கட்டுப்படுத்தலுடன் கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்கக் கூடியதாக இருந்தது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சகல வகுப்பு மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் பொறுப்பற்ற செயற்பாடுகளின் காரணமாக மீண்டும் பாடசாலைகளை மூடக் கூடிய நிலைமையும் ஏற்படலாம். 

இதனால் மீண்டும் நாட்டின் எதிர்கால சந்ததியினர் பாதிப்படையக் கூடும். இவற்றை உணராமல் செயற்படும் தற்போதைய எதிர்க்கட்சிக்கு நாட்டு மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆட்சியை கையளிக்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம்.

கொவிட் அச்சுறுத்தலின் காரணமாக உலகிலுள்ள ஏனைய நாடுகள்  நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு கட்சி பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு;க் கொண்டிருக்கின்றன. 

எனினும் இலங்கையிலுள்ள எதிர்க்கட்சி நாட்டை மேலும் வீழ்ச்சியடைச் செய்யும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு முழு உலகமும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதார சவாலை வெற்றி கொள்வது எவ்வாறு என்பது தொடர்பில் எவ்வித நிலைப்பாட்டினையோ அல்லது அனுபவத்தினையோ கொண்டிராத எதிர்க்கட்சி அரசியல் நோக்கங்களுக்காக மாத்திரம் செயற்படுவதை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனில் சுகாதார விதிமுறைகளை மீறாமல் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கலாம். 

நாட்டில் முக்கியத்துவமுடையது மக்களின் பாதுகாப்பாகும். எமது அரசாங்கமும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டு மக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களையே முன்னெடுத்துள்ளது.

30 ஆண்டுகள் நிலவிய யுத்தத்தின் போதும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கே முக்கியத்துவமளிக்கப்பட்டது. அதே போன்று உலகலாவிய கொவிட் தொற்று அச்சுறுத்தலின் போதும் மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளிக்கப்பட்டது. 

எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்காமல் பொறுப்புடன் செயற்படுமாறு எதிர்க்கட்சியிடம் கேட்டு;க் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37