பதுளை ஹல்துமுல்லை கல்வி வலயத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு பாடசாலை முழுமையாக மூடப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய மூன்று பாடசாலைகளில் குறிப்பிட்ட வகுப்புக்களைக் கொண்ட கட்டிடத் தொகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஹல்துமுல்லை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட நான்கு பாடசாலைகளில் வகுப்புக்கள் உள்ள கட்டிடத் தொகுதிகளுக்கு தொற்றுநீக்கி தெளித்து சுத்தப்படுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள், நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை ‘ரெபிட் அன்டிஜன்’ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.