(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
காணாமற் போனோரது உறவுகள் என்னைச் சந்தித்து, என்னிடம் வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை ஜனாதிபதியிடமும் வெளிப்படுத்தி, நியாயமான கலந்துரையாடலுக்கு முன்வர வேண்டுமென கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை,அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
காணாமற்போனோர் தொடர்பில் பரிகாரம் காண்பதற்கான ஒரு மனிதாபிமான செயலாக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், இப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் தனது அவதானத்தைச் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.
உறவுகள், தோழர்கள், என்னோடு பழகியவர்கள் காணாமற்போனதன் வலியை நான் உளமார உணர்ந்தவன் என்ற வகையில், காணமற்போன உறவுகளது உறவினர்களது உணர்வுகளையும் நான் அறிவேன்.
காணாமற் போனோரது உறவுகள் என்னைச் சந்தித்து, என்னிடம் வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை ஜனாதிபதியிடமும் வெளிப்படுத்தி, நியாயமான கலந்துரையாடலுக்கு முன்வர வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM