(எம்.மனோசித்ரா)

குருணாகல் - ஹெரலியாவல பிரதேசத்தில் கடந்த 15 ஆம் திகதி கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று புதன்கிழமை குருணாகல் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 26 வயதுடைய வில்கொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.