(எம்.மனோசித்ரா)

ஹோமாகம – பிடபெத்த பிரதேசத்தில் ஆயுதங்களால் தாக்கி நான்கு நபர்களை படுகாயமடையச் செய்தமை தொடர்பில் ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 35 மற்றும் 50 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இரு சந்தேகநபர்களும் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். 

சம்பவத்திற்கான காரணம் குறித்து ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.