மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள், மேற்கு அவுஸ்திரேலியாவின் கடற்கரையில் உள்ள கிறிஸ்மஸ் தீவின் காடுகளிலிருந்து கடலுக்கு அணிவகுத்துச் செல்லத் தொடங்கியுள்ளன.

கிறிஸ்மஸ் தீவின் சிவப்பு நண்டுகள் பாலங்கள், வீதிகள் முழுவதும் திரள்வதையும், அலுவலகத் தொகுதிகளின் நுழைவாயில்களில் ஓய்வெடுப்பதன் மூலம் வெப்பத்திலிருந்து தப்பிப்பதையும் காணொளிகளும் புகைப்படங்களும் வெளிக்காட்டுகின்றன.

இந்த கண்கவர் இயற்கை நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தீவில் நடைபெறும் என்று கிறிஸ்மஸ் தீவு தேசிய பூங்காவின் செயல் மேலாளர் பியான்கா ப்ரீஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், ஒக்டோபர் அல்லது நவம்பரில் பருவ மழைக்குப் பிறகு 50 மில்லியன் நண்டுகள் கிறிஸ்மஸ் காட்டில் இருந்து வெளியேறி இனச்சேர்க்கைக்காக கடலுக்குச் செல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.