(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டில் ஏற்பட்டிருக்கும் மசகு எண்ணெய் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள அரபு நாடுகளுடன் ராஜதந்திர ரீதியில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும்.
முன்னைய எமது தலைவர்கள் அவ்வாறான கலதுரையாடல்களை மேற்கொண்டதால் எமக்கு வரும் பிரச்சினைகளின் போது அந்த நாடுகள் கரம்கொடுத்துள்ளன.
ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதில்லை என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற 2022 வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலேயே அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
1973 காலத்தில் என்.எம். பெரேரா நிதி அமைச்சராக இருந்து வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கும்போதும் எரிபொள் பிரச்சினை, வலுசக்தி, கப்பல் போக்குவரத்து என பாரிய பிரச்சினை இருந்து வந்தது. அந்த பிரச்சினைக்கு மத்தியில் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டது.
அதன்போது கூட்டு பொருளாதாரத்துக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டது. அப்போது அந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது.
என்றாலும் 1976 காலப்பகுதியில் அன்று அரசாங்கத்தில் பங்காளியாக இருந்து இரண்டு கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதால், 77இல் தேர்தலுக்கு சென்றபோது ஜே,ஆர். ஆறில் 5பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் ஜே ஆரின் அரசாங்கத்தின் முதலாவது வரசு செலவு திட்டத்தை நிதி அமைச்சராக இருந்த ராேனி டிமெல் சமர்ப்பித்தார்.அதன் மூலம் உலக பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு திறந்த பொருளாதாரத்துக்கு சென்றது.
அன்று மூதல் இன்றுவரை எமது நாடு திறந்த பொருளாதார முறையிலேயே கென்றது. சந்தை பொருளாதாரமே தற்போதும் எமது நாட்டில் இருக்கின்றது.
அதனால் ஏற்றுமதி இறக்குமதியிலேயே எமது பொருளாதாரம் தங்கி இருக்கின்றது. அதனால் நாங்கள் நினைத்த பிரகாரம் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கையை நிறுத்த முடியாது.
அத்துடன் சந்தை பொருளாதாரம் உள்ள எமது நாட்டில் அன்று பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டோம். சதொச, கூட்டுறவு நிறுவனங்கள் ஊடாக பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் இன்று அது சாத்தியமில்லை. விலை கட்டுப்படுத்த பல வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட்டோம்.
ஆனால் அனைத்து வர்த்தமானி அறிவிப்புகளையும் நாங்கள் மீள பெற்றோம். அப்படியாயின் எந்த பொருளாதார அடிப்படையில் நாங்கள் செல்லவேண்டும். அதனால் கலந்துரையாடி ஆலாேசனைகளை பெற்றுக்கொண்டு செயற்பட்டிருந்தால் வர்த்தமானி அறிவிப்புகளை மீள பெறவேண்டி ஏற்பட்டிருக்காது.
அதன் வினைவாக இன்று சாதாரண மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகின்றனர். மரக்கறி விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.
மழை, உரப்பிரச்சினை இதற்கு காரணமாக இருக்கலாம். என்றாலும் இதனை முகாமைத்துவம் செய்யவே அதற்கு அமைச்சு மற்றும் அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களே இதுதொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.
அத்துடன் இன்று மசகு எண்ணெய் கொண்டுவருவதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. இதேபோன்றதொரு பிரச்சினை 2011இல் ஏற்பட்டது. நாங்கள் கடந்த 20 வருடங்களாக ஈரானில் இருந்தே எரிபொருள் பெற்றுவருகின்றோம்.
அப்போது அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக ஈரானில் இருந்து எரிபொருள் கொண்டுவர முடியாதநிலை ஏற்பட்டது. அபோது நான் ஈரான் தூதுவரை அழைத்து இதுதொடர்பாக கலந்துரையாடி, வங்கியில் நாணய கடிதம் ஆரம்பிக்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் எண்ணெய் கப்பல்களை கொண்டுவந்தோம்.
இன்னும் அந்த கடனை நாங்கள் செலுத்தவில்லை. 280 டொலர் மில்லியன் வழங்கவேண்டி இருக்கின்றது. அதனால் எண்ணெய் இல்லை என நாங்கள் ஒருபோதும் சுத்திகரிப்பு நிலையத்தை மூடிவிடவில்லை. அதனால் எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள ராஜதந்திர உதவிகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.
மேலும் முன்னைய எமது தலைவர்கள் அரபு நாடுகளுன் சிறந்த உறவை பேணிவந்தார்கள். எரிபொருள் பிரச்சினை வரும்போது அரபு நாடுகள் எமக்கு கரம் கொடுத்தன. எமது வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் இன்றைய தலைவர்கள் வளங்களை விற்பனை செய்வதாக தெரிவிக்கின்றனர். அதன் உண்மை நிலை எனக்கு தெரியாது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM